பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு; மாவட்ட அளவில் முதலிடத்தை பிடித்தது திருப்பூர்... ( முழு விவரம் ) - KALVISEITHI | கல்விச்செய்தி

Friday, 19 April 2019

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு; மாவட்ட அளவில் முதலிடத்தை பிடித்தது திருப்பூர்... ( முழு விவரம் )

Join Our KalviSeithi Telegram Group - Click Here Well Come to New kalviseithi Website
Join Our KalviSeithi Telegram Group - Click Here





பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 7082 பள்ளிகளை சேர்ந்த 8 லட்சத்து 88 ஆயிரம் பிளஸ் 2 மாணவர்கள் தேர்வை கடந்த மாதம் எழுதினர். மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணி கடந்த வாரம் முடிந்தன. இதையடுத்து, இன்று காலை 9.30 மணிக்கு பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது. தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் 91.3 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும் தமிழகத்தில் மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மாணவிகள் 93.64 சதவிகித தேர்ச்சியும், மாணவர்கள் 88.57 சதவிகித தேர்ச்சியும் பெற்றுள்ளனர். இது மாணவர்களை விட 5.07 சதவிகித மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்ட அளவில் திருப்பூர் 95.37 சதவிகித அளவில் தேர்ச்சி பெற்று முதலிடம் பிடித்துள்ளது. ஈரோடு 95.23 சதவிகித அளவில் தேர்ச்சி பெற்று 2-ம் இடமும், பெரம்பலூர் 95.15 சதவிகித அளவில் தேர்ச்சி பெற்று 3-ம் இடமும் பிடித்துள்ளது. மேலும் தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வில் 1,281 பள்ளிகள் 100% தேர்ச்சியை பெற்றுள்ளது.

அரசு பள்ளி 84.76 சதவிகிதம் தேர்ச்சி

பிளஸ் 2 பொதுத்தேர்வில் அரசு பள்ளி மாணவ, மாணவிகள் 84.76 சதவிகதம் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதில் குமரி மாவட்ட அரசு பள்ளிகளில் பிளஸ் 2 தேர்வெழுதிய மாணவ, மாணவிகளில் 92.64% பேர் தேர்ச்சி பெற்று முதலிடத்தில் உள்ளது.

கணிதத்தில் அதிக பேர் தேர்ச்சி

இயற்பியல் பாடத்தில் 93.89 சதவிகித பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். கணித பாடப்பிரிவில் 96.25 சதவிகித மாணவ, மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். கணிணி அறிவியலில் 95.27 சதவிகிதமும், கணக்கு பதிவியலில் 92.41 சதவிகிதமும், மாணவ, மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். வரலாறு - 86.59%, பொருளியல் - 92.22%, மனையியல் - 93.89%, நர்சிங் - 92.57%, புவியியல் - 89.41% தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழில் 92.12%, ஆங்கிலத்தில் 93.83%, இயற்பியல் - 93.89%, வேதியியல் - 94.88%, உயிரியல் - 96.05%, தாவரவியல் - 89.98%, விலங்கியல் - 89.44%, வணிகவியல் - 91.23%, கணக்குப்பதிவியல் - 92.41% தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மறுகூட்டலுக்கான விண்ணப்பம்

விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு வரும் ஏப்ரல் 22 முதல் 24-ம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அரசு தேர்வுகள் இயக்கம்  தெரிவித்துள்ளது.

ஜுன் 6-ம் தேதி முதல் துணைத்தேர்வு

தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு ஜுன் 6-ம் தேதி முதல் துணைத்தேர்வுகள் நடத்தப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது.

2404 மாற்றுத்திறனாளிகள் தேர்ச்சி

பிளஸ் 2 தேர்வு எழுதிய 2697 மாற்று திறனாளிகளில் 2404 மாற்றுத்திறனாளிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

நாளை முதல் மதிப்பெண் சான்றிதழ்

நாளை முதல் 26-ம் தேதி வரை மாணவர்கள் பள்ளிகளில் மதிப்பெண் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம். தற்காலிக மதிப்பெண் சான்றிதழை ஏப்ரல் 24-ம் தேதி முதல் www.dge.tn.nic.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று பள்ளி கல்வித்துறை இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

மாவட்ட வாரியான தேர்ச்சி விவரம்;

1. திருப்பூர் - 95.37%
2. ஈரோடு - 95.23%
3. பெரம்பலூர் - 95.15%
4. கோயம்புத்தூர் - 95.01%
5. நாமக்கல் - 94.97%
6. கன்னியாகுமாரி - 94.81%
7. விருதுநகர் - 94.44%
8. திருநெல்வேலி - 94.41%
9. தூத்துக்குடி - 94.23%
10. கரூர் - 94.07%
11. சிவகங்கை - 93.81%
12. மதுரை - 93.64%
13..திருச்சிராப்பள்ளி - 93.56%
14. சென்னை - 92.56%
15. தேனி - 92.54%
16. ராமநாதபுரம் - 92.30%
17. புதுச்சேரி - 91.22%
18 தஞ்சாவூர் - 91.05%
19. நீலகிரி - 90.87%
20. திண்டுக்கல் - 90.79%
21. சேலம் - 90.64%
22. புதுக்கோட்டை - 90.01%
23. காஞ்சிபுரம் - 89.90%
24. அரியலூர் - 89.68%
25. தருமபுரி - 89.62%
26. திருவள்ளூர் - 89.49%
27. கடலூர் - 88.45%
28. திருவண்ணாமலை - 88.03%
29. நாகப்பட்டினம் - 87.45%
30. கிருஷ்ணகிரி - 86.79%
31. திருவாரூர் - 86.52%
32. விழுப்பரம் - 85.85
33. வேலூர் - 85.47%
34. காரைக்கால் - 84.47%

No comments:

Post a Comment

Join Our Telegram Group