விடைத்தாள்களை திருத்தும் பணியில் ஈடுபட்ட 500 ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் - தேர்வுத்துறை அதிரடி! - KALVISEITHI | கல்விச்செய்தி

Tuesday, 28 May 2019

விடைத்தாள்களை திருத்தும் பணியில் ஈடுபட்ட 500 ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் - தேர்வுத்துறை அதிரடி!

Join Our KalviSeithi Telegram Group - Click Here Well Come to New kalviseithi Website
Join Our KalviSeithi Telegram Group - Click Here
தமிழகத்தில் பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் விடைத்தாள்களை திருத்தும் பணியில் ஈடுபட்ட 500 ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் சுமார் 60 லட்சம் விடைத்தாள்களை திருத்தும் பணியில் சுமார் 25 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இதில், விடைக்கான மதிப்பெண்களை கூட்டும் போது பல விடைத்தாள்களில் பிழை இருப்பதை தேர்வுகள் இயக்குநரகம் கண்டுபிடித்தது.

இந்த நிலையில், விடைத்தாள் நகல் கேட்டு 50 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். அதில் மறுகூட்டலுக்கு 4,500  மாணவர்கள் விண்ணப்பித்தனர். அதில் 30% விடைத்தாள்களில் மதிப்பெண்கள் கூட்டுவதில் தவறு இருந்ததும், குறைந்தபட்சம் 10 மதிப்பெண்கள் அளவுக்கு பிழை இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக 72 மதிப்பெண்ணுக்கு பதிலாக 27 என்று மதிப்பெண் பெற்றதாக போடப்பட்டது போன்ற தவறுகள் நடந்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த நிலையில், விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டு, கூட்டத் தெரியாத 500 ஆசிரியர்களுக்கு தேர்வுகள் இயக்குநரகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Join Our Telegram Group