மாணவர்கள் குறைவாக இருக்கும் அரசு பள்ளிகளை எப்படி நடத்துவது என்பது குறித்து ஆய்வு - அமைச்சர் செங்கோட்டையன்
மாணவர் சேர்க்கை அதிகாரித்தால், மட்டுமே, ஆசிரியர் பணி வாய்ப்புகள் இனி வழங்கப்படும் என்றும், ஏற்கனவே, கூடுதலாக, 7 ஆயிரம் ஆசிரியர்கள் இருப்பதாகவும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்திருக்கிறார். ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில், செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறியிருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து கோபிச்செட்டிப்பாளையம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட கெட்டிச்செவியூர், பெத்தம்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில், இந்திய விமான நிலைய ஆணையத்தின் சார்பில் அமைக்கப்பட்ட ஸ்மார்ட் வகுப்பறைகளை, அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்தார்.
இதேபோன்று, சத்தியமங்கலம் அருகே காராப்பாடி அரசு உயர்நிலைப்பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறையை தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், ஜூலை மாதம் இறுதிக்குள் 7 ஆயிரம் பள்ளிகளில் வகுப்பறைகள் கணினிமயமாக்கப்படும் என்றார்.
2,142 பள்ளிகளில் 1 முதல் 9 மாணவர்கள் மட்டுமே உள்ளதாகவும், 2 மற்றும் 3 மாணவர்கள் மட்டுமே இருக்கும் அரசு பள்ளிகளை எப்படி நடத்துவது என்பது குறித்து ஆய்வு செய்து வருவதாகவும், அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
No comments:
Post a Comment