விஏஓ, இளநிலை உதவியாளர், தண்டலர் வரைவாளர், நில அளவர் , தட்டச்சர், சுருக்கெழுத்தர் உட்பட 6491 பணியிடங்களுக்கான குரூ-4 தேர்வு குறித்த அறிவிப்பாணையை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) 2018-2019. 2019-2020 ஆகிய ஆண்டுகளுக்கான குரூப்- 4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதன்படி தமிழ்நாடு அமைச்சுகப்பணி, தமிழ்நாடு நீதி அமைச்சப்பணி, தமிழ்நாடு நில அளவை மற்றும் நில பதிவேடுகள் சார் நிலைப்பணி, தமிழ்நாடு தலைமைச் செயலகப்பணி மற்றும் தமிழ்நாடு சட்டமன்ற பேரவைச் செயலகப்பணிகள் என குரூப்-4 நேரடியாக நடத்தப்பட உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
காலி பணியிட விவரம்
கிராம நிர்வாக 397 காலி பணியிடங்கள்
இளநிலை உதவியாளர் 2688 காலி பணியிடங்கள்,
இளநிலை உதவியாளர் (பிணையம்) 104 காலி பணியிடங்கள்,
வரி தண்டலர்- நிலை -1 39 காலி பணியிடங்கள்,
நில 509 காலி பணியிடங்கள், வரைவாளர் 74 காலி பணியிடங்கள்
தட்டச்சர் 1901 பணியிடங்கள்
சுருக்கெழுத்து தட்டச்சர் 784 பணியிடங்கள், ஆக மொத்தம் 6491 பணியிடங்களில் சுருக்கெத்து தட்டச்சர் 784 பணியிடங்கள்.
அடிப்படை ஊதியம் ரூ.19500 லிருந்து ரூ.62000 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மற்ற பணியிடங்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.20800 லிருந்து ரூ.65500 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.விண்ணப்பிக்க ஜுலை 14 கடைசி நாள் காலிப்பணியிட விவரங்கள் தோராயமானது என அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம். டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.ஜுலை 14-ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். தேர்வுத்தேதி செப்.01 2019 ஆகும். நிரந்தர பதிவாளர்கள்தேர்வு கட்டணமாக ரூ.100 –ம் நிரந்தர பதிவு செய்யாதவர்கள் ரூ.150- செலுத்தி பதிவு செய்ய வேண்டும். கல்வித்தகுதி 10-ம் வகுப்பு.10-ம் வகுப்பு படித்தவர்கள் அனைத்து பதவிக்கும் விண்ணப்பிக்கலாம். தட்டச்சர் சுருக்கெழுத்து, தட்டச்சர்பணியிடங்களுக்கு கூடுதலாக தட்டெச்சு, சுருக்கெழுத்து பணியில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
வயது வரம்பு - ஜூலை 01 2019 நிலவரப்படி விஏஓ பணியிடத்துக்கு பொதுப்பிரிவினர் குறைந்த பட்சம் 21 வயதும் அதிகபட்சம் 30 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.எஸ்சி, எஸ்டி, எம்பிசிசி, பிசி உள்ளிட்ட பிரிவினருக்கு 40-வயது வரை விண்ணப்பிக்கலாம்.இளநிலை உதவியாளர், தண்டலர் வரைவாளர், நில அளவர் , தட்டச்சர், சுருக்கெழுத்தர் உள்ளிட்ட பணியிடங்களுக்குவயது வரம்பு, முன்னாள் ராணுவத்தினர் ஆதரவற்றோர் உள்ளிட்டோர் மற்றும் இதர பிரிவினருக்கான வயது சலுகைகள் மற்றும் முழு கல்வி தகுதி உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment