கால்நடை மருத்துவப் படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் கால அவகாசம் மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு ஆகிய இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் செயல்படுகின்றன.
இந்த கல்லூரிகளில் ஐந்தரை ஆண்டுகள் கொண்ட கால்நடை மருத்துவம் மற்றும்பராமரிப்பு படிப்பு (பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச்) மற்றும் 4 ஆண்டுகள் கொண்ட உணவுத் தொழில்நுட்ப பட்டப்படிப்பு (பி.டெக்), பால்வளத் தொழில்நுட்ப பட்டப்படிப்பு (பி.டெக்), கோழியின தொழில்நுட்ப பட்டப்படிப்பு (பி.டெக்) உள்ளன. கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்புகளுக்கு 360 இடங்களில் அகில இந்தியஒதுக்கீட்டுக்கு 54 இடங்கள் (15 சதவீதம்) போக மீதமுள்ள 306 இடங்கள் மாநில அரசுக்கு உள்ளன. பி.டெக் படிப்புகளுக்கு மொத்தம் 100இடங்கள் இருக்கின்றன. இதில் உணவுத் தொழில்நுட்ப படிப்பில் 40 இடங்களில் 6 இடங்கள் (15 சதவீதம்) இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச் மற்றும் பி.டெக் படிப்புகளுக்கு 2019 - 20-ம் கல்விஆண்டு மாணவர் சேர்க்கைக்கு www.tanuvas.ac.in மற்றும் www2.tanuvas.ac.in என்ற இணையதளங்கள் மூலம் விண்ணப்பிப்பது கடந்த மாதம் 8-ம் தேதி தொடங்கியது. ஜூன் 10-ம் தேதி (நேற்று)மாலை 5.45 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப் பட்டிருந்தது. இந்நிலையில், ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வரும் 17-ம் தேதி மாலை 5.45 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
பூர்த்தி செய்யப்பட்ட விண் ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தகுந்த சான்றிதழ்களுடன் வரும்17-ம் தேதி மாலை 5.45 மணிக்குள் தலைவர், சேர்க்கைக்குழு (இளநிலை பட்டப்படிப்பு), தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், மாதவரம் பால்பண்ணை, சென்னை - 600051 என்ற முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும். இதுவரை பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச் படிப்பு மற்றும் பி.டெக் படிப்புகளுக்கு 15 ஆயிரத்துக்கும்மேற்பட்ட மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்.விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் ஜூன் கடைசிவாரத்தில் வெளியிடப்பட உள்ளது.
மாணவர் சேர்க்கைக்கான கலந் தாய்வு ஜூலை இரண்டாவது வாரத்தில் தொடங்க உள்ளது என்று தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment