வருகின்ற ஆண்டில் அனைத்து மாணவர்களுக்கும் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படவுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள காராப்பட்டியில் இன்று ஸ்மார்ட் வகுப்பறையை திறந்துவைத்தபின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அதில், 'வருகின்ற ஆண்டில் அனைத்து மாணவர்களுக்கும் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படவுள்ளது. ஜூலை மாத இறுதிக்குள் 7,000 பள்ளிகளில் வகுப்பறைகள் கணினிமயமாக்கப்படும். நீலகிரியில் துவங்கியவுடன் பள்ளிகள் மூடப்பட வாய்ப்பில்லை; 2 மற்றும் 3 மாணவர்கள் இருக்கும் பள்ளிகளை நடத்துவது குறித்து ஆய்வு செய்து வருகிறோம்' என்றார். மேலும், தமிழகத்தில் 412 மையங்களில் 5 ஆயிரம் பேருக்கு நீட் தேர்வு பயிற்சி இலவசமாக வழங்கப்படுவதாகவும், நீட் தேர்வு பயிற்சிக்காக பிற மாநில மாணவர்கள் 2 லட்சம் ரூபாய் வரை செலவிடுவதாகவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment