தனியார் பள்ளிகள் கட்டண விவரங்களை அறிவிப்பு பலகையில் வெளியிட வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் கடந்த 3ம் தேதி திறக்கப்பட்டது.
தனியார் பள்ளிகளில் கோடை விடுமுறையிலேயே மாணவர்கள் சேர்க்கை தொடங்கியது. இந்தநிலையில், தனியார் பள்ளிகளில் கல்வி கட்டண நிர்ணயக்குழு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் வந்தது. இதையடுத்து, தனியார் பள்ளிகள் கட்டண விவரம் குறித்து பள்ளி நுழைவாயில் அறிவிப்பு பலகையில் வெளியிட வேண்டும் என பள்ளிகல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பள்ளிகல்வித்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் இயங்கி வரும் அனைத்து தனியார் பள்ளிகளிலும் பள்ளி நுழைவாயிலில் கட்டண விபரத்தை அறிவிப்பு பலகையில் ஒட்டி வைக்க வேண்டும்.
மேலும், கல்விக் கட்டண நிர்ணயக்குழு பரிந்துரை அடிப்படையில் கட்டணங்களை பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய விதிமுறைகளை கடைபிடிக்காமல் தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட தனியார் பள்ளிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
No comments:
Post a Comment