மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், செப்டம்பர் வரை, மாணவர் சேர்க்கை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், ஒவ்வொரு ஆண்டும், ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 1 வரையிலான மாணவர் சேர்க்கை, ஏப்ரலில்துவங்கும். பெரும்பாலான பள்ளிகளில், மே மாதம், புதிய வகுப்புகள் துவங்கும் என்பதால், அதற்குள் மாணவர்கள் சேர்ந்து விடுவர்.ஆனாலும், இடமாற்றம் பெறும் அரசு அதிகாரிகள், ஊழியர்களின் பிள்ளைகளை, பள்ளிகளில் சேர்க்க வசதியாக, ஆகஸ்ட் வரையிலும், மாணவர் சேர்க்கை தொடரும்.இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை, ஆகஸ்டில் முடியும் நிலையில், ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்பில் மட்டும், செப்டம்பர் வரையிலும் மாணவர்களை சேர்க்கலாம் என, சி.பி.எஸ்.இ., அனுமதி அளித்துள்ளது.
No comments:
Post a Comment