மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான முடிவுகள் நேற்று வெளியானது. 23 லட்சம் பேர் தேர்வு எழுதியதில் வெறும் 3 லட்சத்து 52 ஆயிரம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியாற்ற விரும்புவோர், அதற்கான தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால்தான் பணி நியமனம் கிடைக்கும். ஒவ்ெவாரு ஆண்டும் இந்த தகுதித் தேர்வு மத்திய பள்ளிக் கல்வி வாரியம் நடத்தி வருகிறது. இந்த ஆண்டுக்கான தேர்வு கடந்த மாதம் 7ம் தேதி நடந்தது. இதற்காக நாடு முழுவதும் 29 லட்சத்து 22 ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். ஆனால், தேர்வில் 23 லட்சத்து 33 ஆயிரம் பேர் மட்டுமே தேர்வு எழுதினர்.
இதையடுத்து விரைவில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று சிபிஎஸ்இ அறிவித்து இருந்தது. இதன்படி தேர்வு நடந்த 23 நாட்கள் கடந்த 30ம் தேதி இரவு தேர்வு முடிவை வெளியிட்டது. இதன்படி, 3 லட்சத்து 52 ஆயிரம் மட்டுமே இந்த தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்வில் தோல்வி அடைந்தவர்கள், மீண்டும் தேர்வு எழுதலாம் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. மத்திய அரசு ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத கட்டுப்பாடு ஏதும் இல்லாததால் எத்தனை முறை வேண்டுமானாலும் இந்த தேர்வை எழுதலாம். ஏற்கனவே, இந்த தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்கள் மீண்டும் தங்கள் மதிப்பெண்களை உயர்த்திக் கொள்ள தேர்வு எழுதலாம். மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று அதற்கான சான்றுகளை பெற்றுள்ளவர்கள், கேந்திர வித்யாலயா, நவோதயா வித்யாலயா, மற்றும் உள்ள மத்திய அரசுப் பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்ற விண்ணப்பிக்கலாம். தற்போது வெளியாகியுள்ள ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மேற்கண்ட மத்திய அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பணிக்கு 2026 வரை விண்ணப்பிக்க முடியும்.
No comments:
Post a Comment