தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்தி வரும் குரூப்-2, குரூப்-2ஏ தேர்வு முறை, பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டு வரப்பட்டு இருக்கிறது. இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள்கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தேர்வு முறை மாற்றம் குறித்து டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் கே.நந்தகுமார் கூறியதாவது:-டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளில் தமிழுக்கும், கிராமப்புற மாணவர்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து சிறப்பான பாடத்திட்டம் வகுக்கக்கப்பட்டு உள்ளது. இதுவரை இருந்த பாடத்திட்டமானது, முதல்நிலை எழுத்துத்தேர்வில் பொதுத்தமிழ் அல்லது பொது ஆங்கிலம் என்று இருந்தது.சுமார் 60 சதவீத மாணவர்கள் அதில் ஆங்கிலத்தை தேர்வு செய்து எழுதி வந்தார்கள். 40 சதவீதம் பேர் மட்டுமே தமிழை தேர்வு செய்தார்கள். அந்தவகையில் 60 சதவீதம்பேர் தமிழே தெரியாமல் தேர்வில் தேர்ச்சி பெறும்நிலை இருந்தது. தற்போது அந்த முறை நீக்கப்பட்டு உள்ளது.தமிழ் தெரியாமல் இனி அரசு வேலைக்கு செல்லமுடியாது.
தற்போது மாணவர்களின் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டில் அவர்களின் புகைப்படம் உள்ளது. ஆள்மாறாட்டம் போன்ற முறைகேட்டை தடுக்க எதிர்காலத்தில் பயோ-மெட்ரிக் முறையைகொண்டுவர தேவையான நடவடிக்கைகளை டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் எடுக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment