நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு பயோமெட்ரிக் வருகை இன்று ( 03.10.2019) முதல் அமல்! பயன்படுத்துவதற்கு முன் செய்யவேண்டியவை - KALVISEITHI | கல்விச்செய்தி

Thursday, 3 October 2019

நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு பயோமெட்ரிக் வருகை இன்று ( 03.10.2019) முதல் அமல்! பயன்படுத்துவதற்கு முன் செய்யவேண்டியவை

Join Our KalviSeithi Telegram Group - Click Here Well Come to New kalviseithi Website
Join Our KalviSeithi Telegram Group - Click Here



நடுநிலைப் பள்ளி,
ஆசிரிய நண்பர்களின் கவனத்திற்கு…

இன்று( 03.10.2019) நம்முடைய விரல் தொட்டுணர் கருவி யை தொடும்முன் செய்ய வேண்டியவை:

1. மடிகணினியை இயக்கத்திற்கு கொண்டு வந்தவுடன் முதலில் இணைய இணைப்பை கொடுங்கள்.

2. இணையம் இடையறாது செயல்படுவதை உறுதிசெய்தபின், மந்த்ரா தொட்டுணர் கருவியை மடிக்கணினியோடு இணையுங்கள்.

3. கணினியின் திரையில் வலதுகீழ் மூலையில் (நேரம் காண்பிக்கப்படும் இடத்தில்) ”Framework is ready to use” என்று மெசேஜ் காண்பிக்கப்படும்.

4. இது தொட்டுணர் கருவி இயங்க ஆரம்பித்துவிட்டதை உறுதிசெய்கின்றது.

5. பின் கணினித் திரையில் இருக்கும் BAS Software ஐ open செய்து கொள்ளுங்கள். மென்பொருள் எவ்வித தடங்கலும் எழாமல் தொடங்கும். ( காத்திருக்கவும்… என்று எதையும் காட்டி நம்மை காத்திருக்க வைக்காது)

6. தங்கள் ஆதார் எண்ணின் கடைசி எட்டிலக்கத்தை எண்டர் செய்யுங்கள்; நாளை இனிதாக தொடங்குங்கள்.

7. பள்ளிநேரம் முடிந்தபின்பு, வரிசை எண் 1லிருந்து 6வரை அடிபிறழாமல் வாருங்கள். நாளை இனிதாக முடியுங்கள்.

No comments:

Post a Comment

Join Our Telegram Group