5 மற்றும் 8 வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று ஆண்டு முழு தேர்ச்சி பெறும் வகையில் விதிவிலக்கு!
ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புக்கான பொதுத்தேர்வில், முதல் மூன்று ஆண்டுகள் மாணவர்கள் அனைவரும் முழு தேர்ச்சி பெறும் வகையில் விதிவிலக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன்,
கட்டாயக் கல்வி சட்டத்தின் கீழ், ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் நடத்தப்படுவதாகக் கூறினார். பொதுத்தேர்வு நடந்தாலும் முதல் மூன்று ஆண்டுகள் யாரும் தோல்வியடைய மாட்டார்கள் என்றும் விளக்கம் அளித்தார். ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி பெறுவார்கள் என்றும் விளக்கம் அளித்தார்.

No comments:
Post a Comment