நிதி ஆயோக் வெளியிட்டுள்ள 2016-2017-ம் ஆண்டுக்கான பள்ளிக்கல்வி தரவரிசைப் பட்டியலில், கேரளா, ராஜஸ்தான், கர்நாடக மாநிலங்கள் முன்னிலையில் உள்ளன.
நாடு முழுவதும் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பள்ளிக்கல்வியின் தரத்தை ஆசிரியர் மாணவர் விகிதம் , மாணவரின் தேர்ச்சி விகிதம், பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதி, நிதிகளை திறம்பட கையாளுதல் உள்ளிட்ட 44 பிரிவுகளின் கீழ் ஆய்வு செய்து நிதி ஆயோக் அமைப்பு தரவரிசைப்படுத்தி உள்ளது.
ஒட்டுமொத்த செயல்திறன் அடிப்படையில், கேரளா, ராஜஸ்தான், கர்நாடகா, தமிழகம் ஆகிய மாநிலங்கள் முன்னிலையில் உள்ளன. நாட்டின் 20 பெரிய மாநிலங்களில், கர்நாடகா, ராஜஸ்தான், கேரளா, ஆந்திரா ஆகிய மாநிலங்கள் கற்றல் திறனை வெளிப்படுத்துதலில் முன்னணியில் உள்ளன
மாணவர்களின் அணுகும் திறனைப் பொருத்தவரையில், தமிழகம் 92 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. ஆனால் கற்றல் திறன் வெளிப்படுத்துதலில் தமிழகம் 30 புள்ளிகளுடன் பின் தங்கி உள்ளது. உள்கட்டமைப்பு வசதிகளைப் பொறுத்தவரை தமிழகம் 50 புள்ளிகளையும், ஆண் பெண் விகிதாச்சாரத்தில் 79 புள்ளிகளையும் பெற்றுள்ளது.
2015-2016-ம் ஆண்டைப் போலவே 2016-17-ம் ஆண்டுக்கான நிதி ஆயோக் பட்டியலில் உத்தரப்பிரதேசம், பஞ்சாப் ஜம்மு – காஷ்மீர் மாநிலங்கள் மிகவும் பின் தங்கிய நிலையிலேயே உள்ளன. யூனியன் பிரதேசங்களில் சண்டிகர் முன்னிலையில் உள்ளது.
No comments:
Post a Comment