புரதச்சத்து குறைபாட்டு நோய்கள் - KALVISEITHI | கல்விச்செய்தி

Tuesday, 1 October 2019

புரதச்சத்து குறைபாட்டு நோய்கள்

Join Our KalviSeithi Telegram Group - Click Here Well Come to New kalviseithi Website
Join Our KalviSeithi Telegram Group - Click Here

புரதம் உடல் வளர்ச்சிக்கும், உடல் செல்கள் மற்றும் திசுக்களை சரிசெய்வதற்கும் அவசியம், புரதங்களின் குறைபாட்டால் உடல் பலவீனம் ஏற்படும். ஆனால் அதிகப்படியான குறைபாட்டால் கீழ்க்கண்ட நோய்கள் ஏற்படுகின்றது.

1. குவாசியோர்கர் (Kwashiorkar)
2. மராஸ்மஸ் (Marasmus) 


குவாசியோர்கர்
அதிகப்படியான புரத குறைபாட்டால் இந்த நோய் ஏற்படுகிறது.இந்த நோய் 1 முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளைத் தாக்குகிறது. இந்த வயதுக்குட்பட்ட குழந்தைகளின் உணவில் முக்கியமாக கார்போஹைட்ரேட்டுகள் காணப்படும். ஆனால் புரதங்கள் மிக மிக குறைந்த அளவே காணப்படும்.
மராஸ்மஸ்
இந்த நோய் பொதுவாக ஒரு வயதுக்குட்பட்ட பச்சிளங் குழந்தைகளைத் தாக்குகிறது.இந்த வயதில் இவர்களுடைய உணவில் கார்போஹைட்ரேட்டுகள், கொழுப்புகள் மற்றும் புரதங்கள் மிக மிகக் குறைவாகவே காணப்படும்.

ஒரு குழந்தைக்குத் தேவையான பரிந்துரைக்கப்படும்  ஊட்டச்சத்துகளின் அளவு :

கார்போஹைட்ரேட்டுகள் 150-200 கிராம்புரதங்கள் : 40 கிராம்கொழுப்புகள் : 35 கிராம்

தாது உப்புக்களின் குறைபாட்டால் ஏற்படும் நோய்கள்

முன் கழுத்துக் கழலை: (காய்டர்)

தைராய்டு சுரப்பி பெரிதாவதால் கழுத்தின் கீழ்பகுதி வீங்கி காணப்படும். இந்த நோய் அயோடின் குறைபாட்டினால் வருகிறது.

வைட்டமினோசிஸ்
வைட்டமின்களின் அளவு அதிகரிப்பதால் ஏற்படும் நோய் `வைட்டமினோசிஸ்' என்று அழைக்கப்படுகிறது.ஹைப்பர் வைட்டமினோசிஸ் எனப்படுவது வழக்கத்தைவிட அதிகப்படியான வைட்டமின்களின் அளவு இருப்பது ஆகும். இந்த நிலையினால் நச்சுத்தன்மையின் அறிகுறிகள் தோன்றலாம்.அதிகப்படியான அளவு வைட்டமின் A இருப்பதை "ஹைப்பர் வைட்டமினோசிஸ் A" என்று அழைக்கிறோம்.

No comments:

Post a Comment

Join Our Telegram Group