RBI Recruitment 2019 | ரிசர்வ் வங்கியில் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு... ₹ 77 ஆயிரம் வரை மாத ஊதியம்...! - KALVISEITHI | கல்விச்செய்தி

Wednesday, 2 October 2019

RBI Recruitment 2019 | ரிசர்வ் வங்கியில் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு... ₹ 77 ஆயிரம் வரை மாத ஊதியம்...!

Join Our KalviSeithi Telegram Group - Click Here Well Come to New kalviseithi Website
Join Our KalviSeithi Telegram Group - Click Here



அனைத்து வங்கிகளின் தலைமை வங்கியான இந்திய ரிசர்வ் வங்கியில் பி கிரேடு பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பு வெளியிடபட்டுள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி, நாட்டின் அனைத்து வங்கிகளுக்கும் தலைமை வங்கியான இருந்து வருகிறது. தன்னாட்சி அதிகாரம் கொண்ட ரிசர்வ் வங்கியின் தலைமையகம் மும்பையில் செயல்பட்டு வருகிறது.

ரிசர்வ் வங்கியில் 201 'பி' கிரேடு காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் தகுதியாவர்களிடம் இருந்து வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொது, பொருளாதார கொள்கை & ஆராய்ச்சி மற்றும் தகவல் மேலாண்மை துறை ஆகிய பிரிவுகளில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி (பொது) : Officers in Grade 'B'(DR)- General
காலியிடங்கள்: 156

பணி (பொருளாதார கொள்கை & ஆராய்ச்சி) : Officers in Grade'B'(DR)- DEPR
காலியிடங்கள்: 22

பணி (தகவல் மேலாண்மை துறை) : Officers in Grade 'B'(DR)- DSIM
காலியிடங்கள்: 23

மொத்த காலியிடங்கள்: 201

கல்வித்ததகுதி:

பொதுப்பிரிவிற்கு விண்ணப்பிப்பவர்கள் 60 சதவிகித மதிப்பெண்களுடன் ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். DEPR மற்றும் DSIM பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் துறைசார்ந்த பாடப்பிரிவில் முதுகலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும். விரிவான விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்ககை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

வயது வரம்பு:

01.09.2019 தேதியின்படி, குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவராகவும் அதிகபட்சமாக 30 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின் படி குறிப்பிட்ட பிரிவினர்களுக்கு வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும். எம்.பில் முடித்தவர்களுக்கு உச்சபட்ச வயதுவரம்பில் 32 என்றும், முனைவர் பட்டம் பெற்றவர்களுக்கு உச்சபட்ச வயதுவரம்பு 34 ஆகும்.

எழுத்துத் தேர்வு:

ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஆன்லைன் எழுத்துத் தேர்வு தாள் 1, தாள் 2, தாள் 3 என மூன்று எழுத்துத்தேர்வுகளாக நடைபெறும்.

ஆன்லைன் எழுத்துத் தேர்வு மையம்:

தமிழகத்தில் சென்னை, கோவை, ஈரோடு, மதுரை, விருதுநகர், சேலம், நாமக்கல், திருச்சி, திருநெல்வேலி ஆகிய இடங்களில் தேர்வு நடக்கும்.

விண்ணப்பக்கட்டணம்:

பொது, ஓபிசி மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.850, எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் https://www.rbi.org.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

முக்கிய தேதிகள்:

ஆன்லைனில் விண்ணப்பப் பதிவு தொடங்கும் தேதி 21.09.2019
விண்ணப்பக் கட்டணம் செலுத்த கடைசி தேதி 11.10.2019
பொது, DEPR, DSIM துறைக்கான தாள் 1 தேர்வு நடைபெறும் தேதி 09.11.2019
பொதுத் துறைக்கு மட்டுமான தாள் 2 தேர்வு தேதி 01.12.2019
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 11.10.2019

No comments:

Post a Comment

Join Our Telegram Group