அரசுப்பள்ளி அடிப்படை வசதிகள் நிறைவேற்றுவது எப்போது? உயர்நீதிமன்றம் கேள்வி!! - KALVISEITHI | கல்விச்செய்தி

Saturday, 30 November 2019

அரசுப்பள்ளி அடிப்படை வசதிகள் நிறைவேற்றுவது எப்போது? உயர்நீதிமன்றம் கேள்வி!!

Join Our KalviSeithi Telegram Group - Click Here Well Come to New kalviseithi Website
Join Our KalviSeithi Telegram Group - Click Here

தமிழகத்தில் பல அரசுப் பள்ளிகளில் கழிப்பறை உட்பட அடிப்படை வசதிகள் இல்லை. அனைத்து அரசுப் பள்ளிகளிலும் கழிப்பறை வசதிகள் செய்ய வேண்டும், என ஆனந்தராஜ் மனு செய்தார். உயர்நீதிமன்ற மதுரைக் கிளை பெண் வழக்கறிஞர்கள் சங்கம், அரசுப் பள்ளிகளில் மாணவியருக்கு இலவச நாப்கின் வழங்கும் திட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும். அவற்றை கருவிகள் மூலம் எரிக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனு செய்தது.

2016 நவம்பரில் நீதிபதிகள் உத்தரவு: அரசு உறுதியளித்தபடி 2016--17 கல்வியாண்டில் பள்ளிகளில் 23 ஆயிரம் கழிப்பறைகளை அமைக்க வேண்டும். 2017-18 கல்வியாண்டில் பெண்கள் மற்றும் இருபாலர் பள்ளிகளில் கழிப்பறை அமைக்க வேண்டும். 2018--19 ல் ஆண்கள் பள்ளிகளில் கழிப்பறைகளை கட்டி முடிக்க வேண்டும். 

அனைத்துப் பள்ளிகளிலும் 3 ஆண்டுகளுக்குள் சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும். துப்புரவு பணியாளர்கள், இரவுக் காவலர்களை நியமிக்க வேண்டும்.
உள்ளாட்சி அமைப்புகள் வசூலிக்கும் கல்வி, சொத்து வரிகள் மூலம் பள்ளிகளில் கழிப்பறைகளை சுத்தமாக பராமரிக்க வேண்டும். தவறும்பட்சத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும்.

 காலியாக உள்ள தலைமையாசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். நாப்கின்கள் வழங்கும் இயந்திரம், பயன்படுத்திய நாப்கின்களை அழிக்க இயந்திரங்கள் அமைக்க வேண்டும். 

இதை நிறைவேற்றியது குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர். நேற்று நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், கிருஷ்ணன் ராமசாமி அமர்வு விசாரித்தது. அரசுத் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

நீதிபதிகள்: அரசின் அறிக்கை தெளிவாக இல்லை. இதுவரை எந்தெந்த அரசுப் பள்ளிகளில் சுற்றுச்சுவர், கழிப்பறை, குடிநீர் உட்பட அடிப்படை வசதிகள் முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளன, எந்தெந்த பள்ளிகளில் பணி நடக்கிறது, 

முழுமையடையாத பள்ளிகளில் எவ்வளவு காலத்திற்குள் வசதிகள் செய்யப்படும், தலைமையாசிரியர், இரவுக் காவலர், துப்புரவு பணியாளர் உட்பட இதர பணியிடங்கள் எவ்வளவு காலியாக உள்ளன என்பது குறித்து பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் டிச.,20ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment

Join Our Telegram Group