ஊழியர்களின் சம்பள உயர்வு விகிதம் - 2020 ல் இந்தியாதான் டாப்!! - KALVISEITHI | கல்விச்செய்தி

Monday, 2 December 2019

ஊழியர்களின் சம்பள உயர்வு விகிதம் - 2020 ல் இந்தியாதான் டாப்!!

Join Our KalviSeithi Telegram Group - Click Here Well Come to New kalviseithi Website
Join Our KalviSeithi Telegram Group - Click Here


வெளிநாட்டு நிறுவனம் ஒன்று நடத்திய ஆய்வில் 2020 ஆம் ஆண்டு ஆசியாவிலேயே இந்தியாவில் பணியாற்றும் ஊழியர்களின் சம்பளம் 9.2 சதவீதம் உயரக்கூடும் என்று தெரிவித்துள்ளது.

கோர்ன் பெர்ரி என்ற நிறுவனம் சுமார் 130 க்கும் மேற்பட்ட நாடுகளில் ஊழியர்களின் சம்பள உயர்வு தொடர்பாக ஆய்வு ஒன்றை நடத்தியது. இந்த ஆய்வில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்களில் இருந்து சுமார் 2 கோடிக்கும் மேற்பட்ட ஊழியர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்துள்ளனர். இதன் அடிப்படையில் ஆய்வு நடத்தப்பட்டது. அந்த ஆய்வில், எந்த நாடுகளில் ஊழியர்களுக்கு பணிக்கு ஏற்ப சம்பள உயர்வு இருக்கும் என்ற கூடுதல் தகவலும் இடம் பெற்றதாக கூறப்படுகிறது.

அந்த ஆய்வில், இந்தியாவில் ஊழியர்களின் சம்பள வளர்ச்சி விகிதம் 10 சதவீதமாக இருந்தது. இது அடுத்த ஆண்டு ( 2020) ல் 9.2 சதவீதமாக குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் நாட்டில் பொருட்களின் விலைவாசி உயர்வுக்கு ஏற்ப பணவீக்கத்தை சரிசெய்து ஒப்பிட்டு பார்த்தால் உண்மையான சம்பளம் என்பது 2020 ல் 5 சதவீதமாக மாற வாயப்பு உள்ளது. ஆசியாவிலேயே இ்நதியாவில் தான் சம்பள உயர்வு அதிக அளவில் இருக்கும் என்று கூறப்படுகிறது. பல துறைகளில் ஊழியர்களின் நம்பிக்கை உணர்வும் ஒரு காரணமாக கூறப்படுகிறது.

உலகளவில் சம்பள உயர்வு என்பது 2020 ஆம் ஆண்டை பொறுத்தவரை சுமார் 4.9 சதவீதமாகவே இருக்கும் என்று நம்பப்படுகிறது. உலகளாவிய பணவீக்கம் 2.8 சதவீதமாக உள்ளது. அதை சரிசெய்தால் ஊழியர்களின் சராசரி சம்பள உயர்வு 2.1 சதவீதமாக இருகும் என்றும் கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

இ்நதியாவை தவிர ஆசியாவின் மற்ற நாடகளை ஒப்பிட்டு பார்த்தால் சம்பள வளர்ச்சி விகிதம் முறைப்படியே,
* இந்தோனேசியா - 8.1 சதவீதம்
* மலேசியா - 5 சதவீதம்
* சீனா -6 சதவீதம்
* தென்கொரியா - 4.1 சதவீதம்
* தைவான் - 3.9 சதவீதம்
* ஜப்பான் - 2 சதவீதம்

No comments:

Post a Comment

Join Our Telegram Group