தமிழகத்தில் 50கிமீ வேகத்தில் சூறாவளி காற்று! வானிலை மையம் எச்சரிக்கை!* - KALVISEITHI | கல்விச்செய்தி

Wednesday, 4 December 2019

தமிழகத்தில் 50கிமீ வேகத்தில் சூறாவளி காற்று! வானிலை மையம் எச்சரிக்கை!*

Join Our KalviSeithi Telegram Group - Click Here Well Come to New kalviseithi Website
Join Our KalviSeithi Telegram Group - Click Here

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.*

*📍இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் கூறியதாவது: "தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 48 மணிநேரத்திற்கு கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.*

*📍குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக  ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. *

*📍சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக  நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.*

*📍குமரிக்கடல் பகுதியில்  சூறாவளி காற்று மணிக்கு 40-50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அடுத்த 2 நாட்களுக்கு குமரிக்கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்".*

*♦Friends Social Media*

No comments:

Post a Comment

Join Our Telegram Group