பொங்கல் பரிசுத் தொகுப்பு உரிய பயனாளிகளுக்கு மட்டுமே வழங்க வேண்டும், கையொப்பம் பெற்ற பிறகே பரிசுத் தொகுப்பை வழங்க வேண்டும் உட்பட பல்வேறு வழிமுறைகளை பின்பற்றுமாறு தமிழக அரசு சார்பில் நியாய விலைக்கடைகளுக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.
பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் விதமாக அனைத்து அரிசி ரேசன் அட்டைதாரர்களுக்கும் ஆயிரம் ரூபாய் ரோக்கத்துடன், பச்சரிசி, முந்திரி, திராட்சை, அடங்கிய பரிசுத்தொகுப்பு வழங்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
அதற்காக தமிழக அரசு சார்பில் 2,363 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு அனைத்து பயனாளிகளுக்கும் சென்று சேர்வதை உறுதி செய்யும் வகையில் பல்வேறு வழிமுறைகள் நியாய விலைக்கடைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எந்த ஒரு புகாருக்கும் இடமளிக்காத வகையில் கண்காணிப்பு குழுக்களை ஏற்படுத்தி தினசரி நடவடிக்கையை அறிக்கையாக தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
பொங்கல்பரிசு வழங்கப்பட்டதும், பயனாளிகள் கைப்பேசிக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டு பயனாளிகள் பயன்பெறுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் கூட்டுறவுத்துறை அனுப்பிய சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment