தமிழக உள்ளாட்சி தேர்தல் ரத்து செய்ய கோரிய வழக்கு மீது இன்று காலை தீர்ப்பு
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலை ஒத்தி வைக்க கோரிய வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவு பெற்றதை அடுத்து, இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு அளிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருகிற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்க உள்ள நிலையில், உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் திமுக தரப்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், வார்டு மறுவரையறை முழுமையாக நிறைவடையும் வரை தேர்தல் நடத்த தடை விதிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இருதரப்பு வாதங்களையும், கேட்ட நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்தனர். அந்த வழக்கில் இன்று காலை 10.30 மணி அளவில் தீர்ப்பு அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று உள்ளாட்சி தேர்தல் வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்க உள்ள நிலையில்
மறு உத்தரவு வரும் வரை
வேட்புமனுக்களை பெற வேண்டாம் என மாவட்ட ஆட்சியர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு.
No comments:
Post a Comment