அம்மா இருசக்கர வாகன திட்டம் : விண்ணப்பதாரர்களுக்கு ஓர் நற்செய்தி !!* - KALVISEITHI | கல்விச்செய்தி

Wednesday, 4 December 2019

அம்மா இருசக்கர வாகன திட்டம் : விண்ணப்பதாரர்களுக்கு ஓர் நற்செய்தி !!*

Join Our KalviSeithi Telegram Group - Click Here Well Come to New kalviseithi Website
Join Our KalviSeithi Telegram Group - Click Here


*📍பணிக்குச் செல்லும் பெண்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தின் கீழ், குறிப்பிட்ட பிரிவினருக்கான வயது வரம்பை தளர்த்தி, தமிழக அரசு இன்று அராசணை வெளியிட்டுள்ளது.*

*📍பெண்களுக்கு 50 சதவீதம் மானிய விலையில், இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தை, தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் 2019-20 ஆம் நிதியாண்டில், இருசக்கர வாகனங்களை வழங்குவதற்கான விண்ணப்பங்கள், கடந்த செப்டம்பர் மாதம் 24 ஆம் தேதி முதல் வழங்கப்பட்டு வந்தது.*

*📍மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவாக, எனப் பெயரிடப்பட்டுள்ள இத்திட்டத்தில் பயன்பெற, குறைந்தபட்சம் எட்டாம் வகுப்பு படித்திருக்க வேண்டும். பணிக்குச் செல்லும் பெண்களாக இருக்க வேண்டும்.*

*📍தனிநபர் ஆண்டு வருமானம் 2.5 லட்சத்துக்கு உள்ளாக இருக்க வேண்டும். முக்கியமாக வயது வரம்பு 18இல் இருந்து 40க்குள் இருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.*

*📍இந்த நிலையில், இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் தங்களது வயது வரம்பை தளர்த்த வேண்டும் என, அரசுப் பள்ளிகளில் வேலை செய்யும் சத்துணவுப் பணியாளர்கள் தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்தனர். அவர்களது கோரிக்கையை பரிசீலித்த அரசு, அம்மா இருசக்கர வாகன திட்டத்தின் கீழ், சத்துணவு பணியாளர்கள் விண்ணப்பிப்பதற்கான வயது வரம்பு 40 திலிருந்து 45 ஆக உயர்த்தப்படுவதாக தமிழக அரசு இன்று (புதன்கிழமை) அறிவித்துள்ளது. அத்துடன், இதற்கான அரசாணையும் இன்று வெளியிடப்பட்டுள்ளது.*

No comments:

Post a Comment

Join Our Telegram Group