ஊரகப் பகுதிக்கான உள்ளாட்சி தேர்தல் அட்டவணை :
1ம் கட்ட தேர்தல்: டிசம்பர் 27
2ம் கட்ட தேர்தல்: டிசம்பர் 30
வேட்பு மனு தாக்கல் தொடங்கும் நாள்: டிசம்பர் 6
வேட்பு மனு தாக்கல் கடைசி நாள்: டிசம்பர் 13
திரும்ப பெற கடைசி நாள்: டிசம்பர் 18
தேர்தல் முடிவு: ஜனவரி 2, 2020
பதவியேற்பு : ஜனவரி 6 , 2020
உச்ச நீதிமன்றத்தில் மாநிலத் தோ்தல் ஆணையம் உறுதியளித்ததன் அடிப்படையில், தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தல் தேதி திங்கள்கிழமை (டிச. 2) காலை 10 மணியளவில் வெளியிடப்பட்டது.
மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது,ஊரக, உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடத்தப்படும்.
இதற்கான தேர்தல் அறிவிக்கை டிசம்பர் 06-ஆம் தேதி வெளியிடப்படும், மேலும் அன்றைய தினம் முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கப்படும். வேட்புமனு தாக்கல் செய்ய இறுதிநாள் டிசம்பர் 13-ஆம் தேதியும், வேட்புமனு ஆய்வு 16-ஆம் தேதியும், வேட்புமனு திரும்பப்பெறுவது 18-ஆம் தேதியும் நடைபெறும்.
வாக்குப்பதிவு காலை 7 மணி தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறும். வாக்கு எண்ணிக்கை 02.1.2020-ஆம் தேதி காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெறும் என்று அறிவித்தார்.
நிர்வாக காரணங்களுக்காக மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. பின்னர் அறிவிக்கப்படும் என தமிழக தேர்தல் ஆணையர் பழசனிசாமி தகவல்.
No comments:
Post a Comment