School Morning Prayer Activities - 02.12.2019 - KALVISEITHI | கல்விச்செய்தி

Sunday, 1 December 2019

School Morning Prayer Activities - 02.12.2019

Join Our KalviSeithi Telegram Group - Click Here Well Come to New kalviseithi Website
Join Our KalviSeithi Telegram Group - Click Here


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 02.12.19

திருக்குறள்

அதிகாரம்:நிலையாமை

திருக்குறள்:333

அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்
அற்குப ஆங்கே செயல்.

விளக்கம்:

நம்மை வந்தடையும் செல்வம் நிலையற்றது என்பதை உணர்ந்து அதைக் கொண்டு அப்பொழுதே நிலையான நற்செயல்களில் ஈடுபட வேண்டும்.

பழமொழி

As is the king, so are subjects

அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி.

இரண்டொழுக்க பண்புகள்

 1. காலம் பொன் போன்றது. எனவே என் நேரத்தை வீணாக்காமல் படிப்பேன்.

2. கடமை கண் போன்றது எனவேஎனது படிப்பிலும் என் கடமைகளை முடிப்பதிலும் கவனம் செலுத்துவேன்.

பொன்மொழி

ஊனம் என்பது மனதைத் தொட்டால் நாம் வெற்றியை தொட முடியாது.உடல் ஊனம் வெறும் பிரம்மையே...

    ---------ஸ்டீபன் ஹாக்கிங்

பொது அறிவு

1. வேர்க்கடலை வியாபாரியின் மகனாகப் பிறந்து அமெரிக்க ஜனாதிபதி ஆனவர் யார்?

 ஜிம்மி கார்ட்டர்.

2. சுதந்திர இந்தியாவின் முதல் போர்க்கப்பல் எது?

 ஐ.என்.எஸ் .டெல்லி.

English words & meanings

Thermology – study of heat. வெப்ப இயல் குறித்த படிப்பு.

Tabulate - to arrange facts or figures in columns. அட்டவணைப்படுத்து

ஆரோக்ய வாழ்வு

 வைட்டமின் ஏ குறைபாடு உள்ளவர்கள் பப்பாளிப் பழத்தை அதிகம் சாப்பிடவேண்டும் .ஏனெனில் பப்பாளி பழத்தில் வைட்டமின் ஏ ,பொட்டாசியம் ,கால்சியம் ஆகியவை நிறைந்துள்ளன.

Some important  abbreviations for students

ASAP - As soon as possible

BIS -  Bureau of Indian Standards

நீதிக்கதை

குகையில் தங்கம்

ஒரு காட்டில் ஒரு சாமியார் மூச்சுத்திணற ஓடிக் கொண்டிருந்தார். அவரை யாரும் துரத்தவில்லை. அவர் ஓடுவதை அருகிலிருந்த மூன்று திருடர்களுக்கு வியப்பை உண்டு பண்ணியது. அவர்கள் சாமியாரைப் பிடித்து வந்து மூச்சுத்திணற ஓடியதன் காரணத்தைக் கேட்டனர். அதற்கு பயத்திலே நடுங்கி நின்ற சாமியார் தன்னைச் சாவு துரத்துவதாகக் கூறினார். திருடர்கள் சாமியாரைப் பைத்தியம் என்று எண்ணினர். அந்த சாவைக் காட்டுமாறு சாமியாரிடம் கூறினர்.

சாமியார் அவர்களை அழைத்துச் சென்று ஒரு குகையைக் காண்பித்தார். அந்த குகையில் கண்ணைப் பறிக்கும் ஒளியுடன் குகை நிறையத் தங்கம் இருந்தது. தங்கத்தைப் பகிர்ந்து கொள்ள திருடர்கள் எண்ணினர். ஆனால் அவர்களை பசி வாட்டியது. அவர்கள் தம்மில் ஒருவனை உணவு வாங்கி வர அருகில் உள்ள ஒரு நகருக்கு அனுப்பினர்.

அவன் உணவுடன் திரும்பியதும் இரு திருடர்களும் அவனைக் கொலை செய்தனர். ஏனெனில் தங்கம் முழுவதையும் தாங்களே கவர எண்ணினர். உணவு வாங்கி வந்த திருடனோ உணவில் நஞ்சு கலந்திருந்தான். அவனும் மற்ற இருவரைப் போலவே தங்கம் முழுவதையும் தானே அபகரிக்க விரும்பினான். நஞ்சூட்டப்பட்ட உணவு உண்ட திருடர்களும் மாண்டனர். தங்கம் பிழைத்தது. சாமியாரின் வாக்குப்பலித்தது.

நீதி :
பேராசை பெரு நஷ்டம்

இன்றைய செய்திகள்

02.12.19

* தமிழகம் முழுவதும் பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் உள்ள அனைத்து அணைகளிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

* அரசு பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் பணியிடம் ஜனவரியில் நிரப்பப்படும் என்று கல்வித்துறை அமைச்சர்  கூறி உள்ளார்.

* உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முதல் இடம் பெற்றமைக்கான விருது உள்ளிட்ட மூன்று தேசிய அளவிலான விருதுகளை மத்திய மந்திரி ஹர்ஷவர்தன் வழங்கினார்.

* டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 4-0 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

* மாநில அளவிலான ஜெய்கிருஷ்ணா நினைவு பள்ளிகள் கிரிக்கெட் போட்டியில் சென்னை பப்ளிக் பள்ளி சாம்பியன் பட்டம் வென்றது.

Today's Headlines

🌸As there is monsoon all throughout Tamil Nadu the dams of Nellai, Kanyakumari and Tenkasi districts were given heavy protection.

🌸 In government schools Physical Education Teacher's vacancies will be filled by January.

🌸 Tamil Nadu bagged three National Awards including donating   Organs in this TN got first place. The award is given by Central Minister honourable Harshavarththan.

🌸 In Davies Cup in Tennis India won against Pakistan by the set of 4-0.

🌸 In the state level Jaikrishna Memorial Schools Cricket competition Chennai School won the Championship.

Prepared by
Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment

Join Our Telegram Group