கொரோனா எதிரொலி: அரசு ஊழியர்கள் சம்பளம் 50% குறைப்பு - தெலுங்கானா அரசு அதிரடி அறிவிப்பு - KALVISEITHI | கல்விச்செய்தி

Monday, 30 March 2020

கொரோனா எதிரொலி: அரசு ஊழியர்கள் சம்பளம் 50% குறைப்பு - தெலுங்கானா அரசு அதிரடி அறிவிப்பு

Join Our KalviSeithi Telegram Group - Click Here Well Come to New kalviseithi Website
Join Our KalviSeithi Telegram Group - Click Here

கொரோனா எதிரொலி: அரசு ஊழியர்கள் சம்பளம் 50% குறைப்பு - தெலுங்கானா அரசு அதிரடி அறிவிப்பு

தெலுங்கானாவில் கொரோனா வைரஸ் பாதிப்பை எதிர்கொள்ள அரசு நிர்வாகத்தில் பல்வேறு பிரிவுகளில் உயரதிகாரிகள், ஊழியர்களுக்கு சம்பள குறைப்பை அம்மாநில அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.


இந்தியாவில் கொரோனா' வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், ஏப்., 14 வரையில், 21 நாட்களுக்கு, நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 'மக்களுக்கு ஏற்படும் பொருளாதார இழப்பை தடுக்க மத்திய நிதி அமைச்சர், நிர்மலா சீதாராமன், பல்வேறு அறிவிப்புகளையும் வெளியிட்டார்.

இந்நிலையில் தெலுங்கானா முதல்வர் சந்திர சேகரராவ் தலைமையில் நடந்த உயர்மட்ட குழு கூட்டத்திற்கு பின் முதல்வர் அலுவலகம் வெளியிடப்பட்ட அறிவிப்பு வருமாறு,தெலுங்கானாவில் பரவிவரும் கொரோனா வைரஸ் பாதிப்பை எதிர்கொள்ள வேண்டி, தெலுங்கானா அரசில் முதல்வர், மற்றும் அமைச்சரவை, எம்.எல்.ஏக்கள், எம்.எல்.சி.க்கள், மாநில நிறுவனத் தலைவர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் சம்பளத்தில் 75 சதவீதம் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தவிர ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ், ஐ.எஃப்.எஸ்., உள்ளிட்ட மத்திய அரசு அதிகாரிகளுக்கு 60 சதவீத சம்பளக் குறைப்பு இருக்கும். மற்ற பிரிவு ஊழியர்களுக்கு 50 சதவீத சம்பளக் குறைப்பும், நான்காம் வகுப்பு, அவுட்சோர்சிங் மற்றும் ஒப்பந்த ஊழியர்களுக்கு, 10 சதவீத சம்பள குறைப்பும், அனைத்து பொதுத்துறை நிறுவனங்கள், அரசு மானியங்களைப் பெறும் நிறுவனங்கள், அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்களுக்கும் சம்பள குறைப்பு இருக்கும். .இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Join Our Telegram Group