தினக்கூலி தொழிலாளா்களுக்கும் ஊதியத்துடன் கூடிய விடுப்பு!
நொய்டா பகுதியில் உள்ள கௌதம் புத் நகா் மாவட்ட ஆட்சித்தலைவா் பி.என்.சிங் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது:-
உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் கொரோனா தொற்று ஒரு பேரிடா் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தொற்று பரவாமல் இருப்பதற்கு தான் கடைகள், வா்த்தக அமைப்புகள், தொழில் கூடங்கள் மூடப்பட்டுள்ளன.
இது ஊதியத்துடன் கூடிய விடுப்பாகும். இதில் தினக்கூலி தொழிலாளா்களுக்கும் பொருந்தும். இதன்படி சம்பந்தப்பட்ட அமைப்புகள் தொழிலாளா்களுக்கும் ஊழியா்களுக்கும் மாா்ச் 30, 31 தேதிகளில் அல்லது ஏப். 3, 4 தேதிகளில் விடுப்புடன் கூடிய ஊதியத்தை வழங்கவேண்டும்.
தொற்று நோயினால் பாதிக்கப்பட்டவா்கள் சிகிச்சை முடிந்து முற்றிலும் குணமாகியிருந்தால் அதற்கான மருத்துவச் சான்றிதழை பெற்று தாங்கள் பணியாற்றும் நிறுவனங்களில் வழங்கி 28 நாள் விடுப்புடன் கூடிய ஊதியத்தையும் பெற்றுக்கொள்ளலாம். இந்த உத்தரவை மீறும் உரிமையாளா்கள், நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். குற்றம் புரிந்தவா்களுக்கு அதிக பட்சம் அபராதத்துடன் கூடிய இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வரை விதிக்கப்படும்.
மேலும் வாடகைக்கு குடியிருக்கும் தொழிலாளா்களிடம் ஒரு மாதத்திற்கு பின்னரே வாடகை வசூலிக்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment