கொரோனா வைரஸ் பாதிப்பு : ஸ்பெயின் இளவரசி பலி
சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இநத வைரசுக்கு இன்னும் தடுப்பூசி கண்டுபிடிக்கப்படாத நிலையில், கொரோனா வைரசை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
ஸ்பெயினில் 73 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள நிலையில், கிட்டதட்ட 6 இந்த வைரஸ் பாதிப்புக்கு பலியாகியுள்ளனர். இந்நிலையில்,கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஸ்பெயின் அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசி மரியா தெரசா உயிரிழந்தார்.
ஸ்பெயின் நாட்டில் பரவிய கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அந்நாட்டு இளவரசி மரியா தெரசா (86), பிரான்ஸ் தலைநகர் பாரீசில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் தற்போது அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அரச குடும்பத்தை சேர்ந்த ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றால் பலியானது ஸ்பெயின் நாட்டு மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

No comments:
Post a Comment