மத்திய மனிதவளத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் சிபிஎஸ்இ பள்ளி பாடத்திட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் புதிய மாற்றங்கள் கொண்டு வருவது வழக்கம். அதன்படி, தற்போது 2020-21 கல்வியாண்டிற்கான சிபிஎஸ்இ மேல்நிலை வகுப்பில், கணித பாடம் மாற்றப்பட்டுள்ளது.
சிபிஎஸ்இ கணிதவியல் (041) பாடமானது, அறிவியல் துறைகளில் சேருவதற்கு ஏற்ற வகையில், அடிப்படை பாடத்திட்டங்களைக் கொண்டிருக்கும். ஆனால், தற்போது கணிதம் என்பது அறிவியல் பிரிவுகளை தாண்டி, பொருளாதாரம், வணிகம், சமூக அறிவியல் உள்ளிட்ட பலவற்றுக்கும் பயன்படுகிறது.
சிபிஎஸ்இ 10ம் வகுப்பில் அடிப்படை கணிதம் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், அடுத்தாக 11 ஆம் வகுப்பில் பயன்பாட்டுக் கணித பாடப்பிரிவை தேர்வு செய்யலாம். இந்த புதிய அப்ளைடு மேக்ஸ் பாடம் 2020-21 கல்வியாண்டு முதல் அமலுக்கு வருகிறது.
மாணவர்கள் கணிதம் அல்லது பயன்பாட்டு கணிதம் இவற்றில் ஒன்றை மட்டும் தேர்வு செய்து கொள்ள முடியும். இரண்டையும் தெரிவு செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
10TH 2020 _2021 books
ReplyDelete