சென்னை: தமிழகத்தில் 234 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் அவர்கள் எந்தெந்த மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.
கொரோனா வைரஸின் உக்கிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை ஒடுக்க உலக நாடுகள் ஒன்றிணைந்து போராடி வருகின்றன. இந்த நிலையில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1834 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தை எடுத்துக் கொண்டோமேயானால் நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை பல்க்காக கூடி வருகிறது. முந்தைய நாட்களில் தமிழகத்தில் ஒரே நாளில் ஒருவர், இருவர், 5 பேர், 6 பேர் என போய் 12-க்கு மேல் அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் ஒரே நாளில் 110 பேருக்கு கொரோனா உறுதி? எந்த மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்?
எண்ணிக்கை
234 ஆக உயர்வு
இந்த எண்ணிக்கை நேற்று முன் தினம் ஒரே நாளில் 57 பேருக்கு கொரோனா தாக்குதல் இருந்தது. நேற்று ஒரே நாளில் 110 பேருக்கு கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. மகாராஷ்டிரா, கேரளாவுக்கு அடுத்தபடியாக 3ஆவது இடத்தில் தமிழகம் முன்னேறியுள்ளது சற்று கவலை தரும் செய்தியாகவே பார்க்கப்படுகிறது. தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 234 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா
சீல் வைப்பு
அந்த வகையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் நெல்லையும் கோவையும் முதலிடத்தை பிடித்துள்ளன. அதில் நெல்லை மேலப்பாளையத்தில் 22 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்து அந்த பகுதி மற்ற ஊர்களுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதி முழுவதும் சீல் வைக்கப்பட்டது.
யார் யாருக்கு
யாருக்கு கொரோனா
இந்த நிலையில் நெல்லையில் 29 பேருக்கும், கோவையில் 29 பேருக்கும், சென்னையில் 26 பேருக்கும் ஈரோட்டில் 26 பேருக்கும் தேனியில் 20 பேருக்கும் நாமக்கல்லில் 18 பேருக்கும், திண்டுக்கல்லில் 17 பேருக்கும், மதுரையில் 15 பேருக்கும், செங்கல்பட்டில் 11 பேருக்கும், திருப்பத்தூரில் 7 பேருக்கும் சேலத்தில் 6 பேருக்கும் கன்னியாகுமரியில் 5 பேருக்கும், சிவகங்கையில் 5 பேருக்கும் விழுப்புரம், தூத்துக்குடியில் தலா 3 பேருக்கும், கரூர், திருவாரூர், திருவண்ணாமலையில் தலா 2 பேருக்கும், தஞ்சை, ராணிப்பேட்டை, விருதுநகர், திருப்பூர், காஞ்சிபுரம், வேலூர் தலா ஒருவருக்கும் என மொத்தம் 234 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
உயிரிழப்பு
குணமடைந்த நபர்
இவர்களில் 6 பேர் குணமடைந்துள்ளனர். ஒருவர் உயிரிழந்துவிட்டார். சமூக பரவலை தடுக்க தமிழக அரசு கடும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எனினும் கொரோனாவின் தீவிரத்தை உணராத பலர் வீடுகளை விட்டு வெளியே வரும் காட்சிகள் அதிகரித்துள்ளது. நேற்றைய தினம் பாடி மேம்பாலத்தில் 100-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சூழ்ந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.இது அதிர்ச்சியளிப்பதாக இருந்தது.
No comments:
Post a Comment