50 வயதிலும் ஃபிட்டாக இருக்க ஆசையா? - KALVISEITHI | கல்விச்செய்தி

Wednesday, 1 April 2020

50 வயதிலும் ஃபிட்டாக இருக்க ஆசையா?

Join Our KalviSeithi Telegram Group - Click Here Well Come to New kalviseithi Website
Join Our KalviSeithi Telegram Group - Click Here
50 வயதிலும் ஃபிட்டாக இருக்க ஆசையா?





உடற்தகுதி என்று வரும்போது மனதில் கொள்ள வேண்டியது, வயது என்பது வெறும் எண் மட்டும்தான் என்பதையே. 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தினமும் சிறிய அளவு உடற்பயிற்சி செய்வதுகூட, அவர்களுக்குப் பெறும் அளவு ஆரோக்கிய நன்மைகளைத் தரும் என்பது உண்மை.

எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பது தசைகளை வலுவாக்க உதவுகிறது மேலும் உங்கள் உடலை லகுத்தன்மையுடன் வைக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.

நீங்கள் சமீபத்தில் உடற்பயிற்சி செய்யவில்லை என்றால், சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது மிகவும் முக்கியம் என்று உடற்கூறு நிபுணர்கள் கூறுகின்றனர். உங்கள் உடலிலுள்ள அதிகப்படியான கலோரிகளை எரிக்க வசதியாக, முதலில் மெதுவாக ஆரம்பித்து, பின் அதிகரித்துக் கொள்ளும்படியான உடற்பயிற்சிச் சூழலை உருவாக்கிக் கொள்ளுங்கள்.

உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதை நோக்கி நீங்கள் முயற்சி எடுக்கும் போது, முதலில் தேவையற்ற பதற்றத்தை அல்லது பயத்தை விட்டுவிடுங்கள். தினசரி குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் இதற்கென உழைப்பதன் மூலம் அடிப்படை உடற்பயிற்சி இலக்குகளை எளிதாகவே அடைய முடியும். பொறுமையாகத் தொடங்குவது மிகவும் முக்கியம், பின்னர் உங்கள் சகிப்புத்தன்மை, வலிமை, சமநிலை மற்றும் லகுத்தன்மையை படிப்படியாக உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும். உங்களால் செய்ய முடிந்த அளவு பயிற்சிகளைச் செய்தால் போதுமானது, அதிகமாகச் செய்து உடலை வருத்திக் கொள்வதைத் தவிர்க்கவும், குறிப்பாக புதிய வொர்க்அவுட்டை முயற்சிப்பது இதுவே முதல் முறை என்றால் கற்றுக் கொண்டு அதனை படிப்படியாக பழகி வருவது நல்லது.

மூன்று-நான்கு வாரங்கள் தொடர்ச்சியான உடற்பயிற்சிக்குப் பின்னர், நீங்கள் வேலை செய்யும் போது மிகவும் உங்கள் உடல் நீங்கள் சொன்னதைச் செய்யும். 50 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கான உடற்பயிற்சிகள் ஆரம்பத்தில் குறைந்த தாக்கம்தான் தருவதாக இருக்கும், ஆனால் விறுவிறுப்பான நடைபயிற்சி, சைக்கிள் ஓட்டுதல் மற்றும் நீச்சல் போன்றவை மிகவும் பயனுள்ள பயிற்சிகள். ஆரம்பத்திலேயே நம்பிக்கையையும் வலிமையையும் வளர்க்க இவை உதவும்.

உடற்தகுதிக்கு நீங்கள் தகுதியான பிறகு, 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் தினசரி 30 நிமிடங்கள் மிதமான ஏரோபிக் செயல்பாட்டைச் செய்ய வேண்டும், வாரத்திற்கு குறைந்தது மூன்று முறையாவது தசையை வலுப்படுத்த வேண்டும், வாரத்தில் இரண்டு நாட்கள் சமநிலை பயிற்சிகள் செய்ய வேண்டும். டாய்ச்சி, பால் ரூம் நடனம் ஆகியவை உள்ளிட்டவை உங்களை உற்சாகமாகவும் அதே சமயம் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும்.

யோகாவை தவறாமல் பயிற்சி செய்வது உங்கள் ஆரோக்கியத்திற்கு நீண்ட கால நன்மைகளை அளிக்கும். இது உடல் மற்றும் மனத்தின் சமநிலையை மேம்படுத்தவும், மூட்டுகளைப் பாதுகாக்கவும் உதவுகிறது மற்றும் நாள்பட்ட வலியைக் கட்டுப்படுத்தவும் உதவும்.

No comments:

Post a Comment

Join Our Telegram Group