அஜீரணத்தை சரி செய்ய என்ன செய்ய வேண்டும்? - KALVISEITHI | கல்விச்செய்தி

Thursday, 2 April 2020

அஜீரணத்தை சரி செய்ய என்ன செய்ய வேண்டும்?

Join Our KalviSeithi Telegram Group - Click Here Well Come to New kalviseithi Website
Join Our KalviSeithi Telegram Group - Click Here
அஜீரணத்தை சரி செய்ய என்ன செய்ய வேண்டும்?

ஜீரணம் சீராக நடைபெற கனமான பொருட்களை அரை வயிறு அளவுக்கும், இலகுவான பொருட்களை சற்று அதிகமாகவும் சாப்பிடலாம் என்று ஆயுர்வேதம் குறிப்பிடுகிறது. அளவுக்கு மீறிய உணவு எல்லா தோ‌ஷங்களையும் பிரச்சினைக்கு உள்ளாக்குகிறது. இதனால் பல விதமான வயிற்று நோய்கள் உருவாகின்றன.

அஜீரண நோய் உள்ளவர்கள், கடுமையான வயிற்று வலியால் பாதிக்கப்பட்டால் மருந்து சாப்பிடாமல் பட்டினி இருக்க வேண்டும் என்ற கருத்து பரவலாக இருக்கிறது. அஜீரணத்தால் மலம், சிறுநீர் கழிப்பதில் தடை, குடல் வாட்டம், அபான வாயு தடை, வயிற்றுப் பொருமல் போன்றவை ஏற்படலாம். கோபம், மனத்துயரம் போன்றவற்றாலும் செரிக்கும் தன்மை பாதிக்கப்படுகிறது.

சம்பா அரிசி, கோதுமை, ரவை, அறுபதாம் குருவை, ஆட்டு இறைச்சி, அரைக் கீரை, இளம் முள்ளங்கி, நெல்லிக்காய், திராட்சை, புடலங்காய், வெல்லம், சிறுபயறு, சுத்தமான நீர், பால், நெய், மாதுளம்பழம், இந்துப்பு போன்றவற்றைச் சாப்பிடலாம். வாழைப்பழம், பலாப்பழம், மோதகம் போன்றவற்றை முதலில் சாப்பிட வேண்டும்.

புளிப்பானவற்றை நடுவில் சாப்பிட வேண்டும். கசப்பாக உள்ளவற்றைக் கடைசியில் சாப்பிட வேண்டும். இரைப்பையின் பாதி அளவு திட உணவும், கால் பாகம் திரவ உணவும் எடுத்துக்கொள்ள வேண்டும். எஞ்சிய கால் பாகத்தை வாயுவுக்கும், அதன் அசைவுக்கும் விட்டுவிட வேண்டும்.

No comments:

Post a Comment

Join Our Telegram Group