வாய் நாற்றத்தை போக்க இயற்கை வழி - KALVISEITHI | கல்விச்செய்தி

Thursday, 2 April 2020

வாய் நாற்றத்தை போக்க இயற்கை வழி

Join Our KalviSeithi Telegram Group - Click Here Well Come to New kalviseithi Website
Join Our KalviSeithi Telegram Group - Click Here
வாய் நாற்றத்தை போக்க இயற்கை வழி

பெரும்பாலும் 'ஸ்கேலிங்' முறையில் பற்களை சுத்தம் செய்து கொண்டாலே வாய் நாற்றம் சரியாகிவிடும். இது தவிர, பற்களில் வேறு ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால், அவற்றுக்குரிய சிகிச்சைகளை பெற்றுக்கொள்ள வேண்டும். அடுத்து, பொது மருத்துவர் மற்றும் காது மூக்கு தொண்டை சிறப்பு மருத்துவர் உதவியுடன் சைனஸ் எக்ஸ்ரே மற்றும் ஸ்கேன், மார்பு எக்ஸ்ரே, எண்டாஸ்கோபி பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

இவற்றால் மற்ற காரணங்களைக் கண்டறிந்து, அவற்றையும் களைந்துவிட்டால் வாய் நாற்றத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடலாம். வாய் நாற்றத்தை தடுக்க விரும்புவோர், வாயை சுத்தமாக வைத்துக்கொள்வதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். தினமும் காலை எழுந்ததும் ஒருமுறை, இரவு படுக்கப் போகும் முன்பு ஒருமுறை பற்களை துலக்க வேண்டும். கடினமான பல்துலக்கிகளை (பிர‌ஷ்) பயன்படுத்தினால் பல் ஈறுகளுக்குக் கெடுதல் உண்டாகிவிடும். மிருதுவான பல்துலக்கிகளை பயன்படுத்துவது நல்லது.

No comments:

Post a Comment

Join Our Telegram Group