சிக்கன், முட்டை சாப்பிடுவதால் கொரோனா வைரஸ் பரவுமா.? சமூக வலைத்தளங்களில் வைரலாகும் செய்தி.! தமிழக அரசு விளக்கம். - KALVISEITHI | கல்விச்செய்தி

Wednesday, 1 April 2020

சிக்கன், முட்டை சாப்பிடுவதால் கொரோனா வைரஸ் பரவுமா.? சமூக வலைத்தளங்களில் வைரலாகும் செய்தி.! தமிழக அரசு விளக்கம்.

Join Our KalviSeithi Telegram Group - Click Here Well Come to New kalviseithi Website
Join Our KalviSeithi Telegram Group - Click Here

சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது. கொரோனாவால் இதுவரை 42 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிர் இழந்துள்ளனனர். கொரோனாவை கட்டுப்படுத்த உலக நாடுகள் போராடிவருகின்றன.

இந்நிலையில், கொரோனா பீதி ஒருபுறம் இருக்க, அதுகுறித்து பரவும் வதந்திகளால் மக்கள் மேலும் அச்சமடையும் சூழல் உருவாகியுள்ளது. கொரோனா சம்மந்தமாக பரவும் பல வதந்திகளில் முட்டை, சிக்கன் சாப்பிடுவதால் கொரோனா பரவும் என்ற வதந்தியும் ஓன்று.

இந்நிலையில், முட்டை அல்லது சிக்கன் சாப்பிடுவதால் கொரோனா பரவாது என தமிழக கால்நடை பராமரிப்புத் துறை தரப்பில் மீண்டும் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. கோழி, முட்டை மற்றும் இறைச்சி சாப்பிடுவதால் கொரோனா பரவாது எனவும், இவற்றை சாப்பிடுவதால் கொரோனா பரவும் என வீண் வதந்திகளை பரப்பினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற வீண் வதந்திகளால் கோழி வளர்ப்பு தொழில் நலிவடையும் எனவும் பொருளாதார இழப்பு ஏற்படும் எனவும் அரசு எச்சரித்துள்ளது.

No comments:

Post a Comment

Join Our Telegram Group