தேர்தலில் பணிபுரிய அலுவலர்களுக்கு 14ல் முதற்கட்ட பயிற்சி! - KALVISEITHI | கல்விச்செய்தி

Thursday, 11 July 2019

தேர்தலில் பணிபுரிய அலுவலர்களுக்கு 14ல் முதற்கட்ட பயிற்சி!

Join Our KalviSeithi Telegram Group - Click Here Well Come to New kalviseithi Website
Join Our KalviSeithi Telegram Group - Click Here


வேலூர் மக்களவை தொகுதி தேர்தலையொட்டி வாக்குப்பதிவுக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. வேட்பு மனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது. இந்நிலையில், வேலூர் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட குடியாத்தம், ஆம்பூர், வாணியம்பாடி, கே.வி.குப்பம், அணைக்கட்டு, வேலூர் சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் சேர்த்து மொத்தம் 690 இடங்களில் 1,553 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.  மொத்தம் 7,576 அலுவலர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்த முடிவு செய்துள்ளனர். இவர்களுக்கு 4 கட்டமாக பயிற்சி அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. முதற்கட்ட பயிற்சி வரும் 14ம் தேதி தொடங்குகிறது.மாவட்டம் முழுவதும் 6 பயிற்சி மையங்களில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி நடத்தப்படுகிறது.

அதாவது வேலூர் டிகேஎம் மகளிர் கல்லூரி, அரியூர் ஸ்பார்க் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, குடியாத்தம் கே.எம்.ஜி கல்லூரி உட்பட 6 இடங்களில் நடக்கிறது. இதுகுறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறுகையில், வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் பணிகளை எவ்வாறு செய்வது என்பது குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட உள்ளது. குறிப்பாக இப்பயிற்சியில், வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபேட் இயந்திரத்தை எவ்வாறு தயார் செய்து வைக்க வேண்டும் என்பது போன்ற பல்வேறு அம்சங்கள் குறித்து செயல்விளக்கம் அளிக்கப்படுகிறது என்றன

No comments:

Post a Comment

Join Our Telegram Group