2ம் கட்ட மருத்துவ கவுன்சிலிங் துவக்கம் - KALVISEITHI | கல்விச்செய்தி

Tuesday, 30 July 2019

2ம் கட்ட மருத்துவ கவுன்சிலிங் துவக்கம்

Join Our KalviSeithi Telegram Group - Click Here Well Come to New kalviseithi Website
Join Our KalviSeithi Telegram Group - Click Here

அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான, இரண்டாம் கட்ட மருத்துவகவுன்சிலிங், இன்று துவங்குகிறது.தமிழகத்தில், அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் உள்ள, எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., இடங்களுக்கான முதற்கட்ட கவுன்சிலிங், 8ம் தேதி துவங்கி முடிந்துள்ளது.

மாநில அரசு ஒதுக்கீடு மற்றும் நிர்வாகஒதுக்கீடு என, தனித்தனியாக கவுன்சிலிங் நடந்தது. இதில், மாநில அரசு ஒதுக்கீட்டில் அனைத்து, எம்.பி.பி.எஸ்., இடங்களும் நிரம்பின.

குறித்த காலத்திற்குள் கல்லுாரியில் சேராத இடங்கள் மற்றும் அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரம்பாத இடங்கள் என, 146 இடங்கள் காலியாக உள்ளன. அதேபோல, தனியார் மருத்துவக் கல்லுாரிகளில், மாநில அரசு ஒதுக்கீட்டில், 69 இடங்கள் காலியாக உள்ளன.மேலும், ராஜா முத்தையா, கே.கே.நகர், இ.எஸ்.ஐ.சி., - பெருந்துறை, ஐ.ஆர்.டி., ஆகிய மூன்று மருத்துவக் கல்லுாரிகளில், 48 என, மொத்தம், 263 எம்.பி.பி.எஸ்., இடங்கள் காலியாக உள்ளன.

இந்த இடங்களுக்கான, இரண்டாம் கட்ட கவுன்சிலிங், சென்னை, ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில், இன்று துவங்குகிறது.இந்த கவுன்சிலிங், ஆகஸ்ட், 1 வரை நடைபெறும் என, மருத்துவ மாணவர் தேர்வுக் குழு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Join Our Telegram Group