நாடு முழுவதும் 5¼ லட்சம் போலீஸ் பணியிடங்கள்காலி தமிழ்நாட்டில் 22,420 இடங்கள் நிரப்பப்படவில்லை - KALVISEITHI | கல்விச்செய்தி

Tuesday, 9 July 2019

நாடு முழுவதும் 5¼ லட்சம் போலீஸ் பணியிடங்கள்காலி தமிழ்நாட்டில் 22,420 இடங்கள் நிரப்பப்படவில்லை

Join Our KalviSeithi Telegram Group - Click Here Well Come to New kalviseithi Website
Join Our KalviSeithi Telegram Group - Click Here

நாடு முழுவதும் 5¼ லட்சம் போலீஸ் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. இதில், தமிழ்நாட்டில் மட்டும் 22 ஆயிரத்து 420 பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. 5¼ லட்சம் இடங்கள் காலி கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி நிலவரப்படி, போலீஸ் பணியிடங்கள் காலி நிலவரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் புள்ளிவிவரம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, அன்றைய தேதியில், நாடு முழுவதும் ஒப்புதல் அளிக்கப்பட்ட போலீஸ் பணியிடங்களின் மொத்த எண்ணிக்கை 18 லட்சத்து 51 ஆயிரத்து 332 ஆகும். அதில், 5 லட்சத்து 28 ஆயிரத்து 396 பணியிடங்கள் காலியாக உள்ளன. மாநில அளவில், உத்தரபிரதேசத்தில்தான் அதிக அளவாக ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 286 போலீஸ் பணியிடங்கள் காலியாக உள்ளன. அங்குஒப்புதல் அளிக்கப்பட்ட பணியிடங்கள் எண்ணிக்கை 4 லட்சத்து 14 ஆயிரத்து 492 ஆகும். தமிழ்நாடு தமிழ்நாட்டில் ஒப்புதல் அளிக்கப்பட்ட போலீஸ் பணியிடங்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 130 ஆகும். அதில், 22 ஆயிரத்து 420 பணியிடங்கள் காலியாக உள்ளன.

கர்நாடகாவில், ஒப்புதல் அளிக்கப்பட்ட இடங்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்து 243. அதில், 21 ஆயிரத்து 943 இடங்கள் காலியாக உள்ளன. ஆந்திராவில் ஒப்புதல் அளிக்கப்பட்ட போலீஸ் பணியிடங்கள் எண்ணிக்கை 72 ஆயிரத்து 176. இதில், 17 ஆயிரத்து 933 பணியிடங்கள் காலியாக உள்ளன. தெலுங்கானா மாநிலத்தில், ஒப்புதல் அளிக்கப்பட்ட போலீஸ் பணியிடங்கள் எண்ணிக்கை 76 ஆயிரத்து 407 ஆகும். இதில், 30 ஆயிரத்து 345 இடங்கள் காலியாக உள்ளன. நாகாலாந்து மாநிலத்தில் மட்டும் ஒப்புதல் அளிக்கப்பட்டதற்கு அதிகமாகவே போலீசார் உள்ளனர். ஒப்புதல் அளிக்கப்பட்ட இடங்கள் 21 ஆயிரத்து 292 ஆகும். ஆனால், அதை விட 941 போலீசார் கூடுதலாக வேலை பார்த்து வருகிறார்கள்.

மாநில வாரியாக.. மாநிலவாரியாக போலீஸ் காலியிடங்கள் எண்ணிக்கை வருமாறு:- பீகார்-50,291, மேற்கு வங்காளம்-48,981, மராட்டியம்- 26,195, மத்தியபிரதேசம்- 22,355, குஜராத்-21,070, ஜார்கண்ட்-18,931, ராஜஸ்தான்- 18,003, அரியானா-16,844, சத்தீஷ்கார்-11,916, ஒடிசா-10,322, அசாம்-11,452, காஷ்மீர்-10,044. மெதுவான ஆள் தேர்வு முறை, போலீசார் ஓய்வு பெறுதல், எதிர்பாராத மரணம் ஆகியவைதான், இவ்வளவு காலியிடங்கள் இருப்பதற்கு காரணம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Email ThisBlogThis!Share to TwitterShare to Facebook

No comments:

Post a Comment

Join Our Telegram Group