மாணவர்களுக்கு இறுதி கட்ட வாய்ப்பாக பொறியியல் படிப்புக்கு நாளை கலந்தாய்வு! - KALVISEITHI | கல்விச்செய்தி

Monday, 29 July 2019

மாணவர்களுக்கு இறுதி கட்ட வாய்ப்பாக பொறியியல் படிப்புக்கு நாளை கலந்தாய்வு!

Join Our KalviSeithi Telegram Group - Click Here Well Come to New kalviseithi Website
Join Our KalviSeithi Telegram Group - Click Here

தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் ஆர்.புரு ஷோத்தமன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: பொறியியல் கலந்தாய்வு 4 சுற்றுகளாக நடைபெற்று முடிந்துள் ளது.

இதில், இணைய வழி கலந் தாய்வு மற்றும் துணை கலந்தாய் வுக்கு முன்கட்டணம் செலுத்திவிட்டு கலந்தாய்வில் கலந்து கொள்ளா தவர்களுக்கும் மற்றும் நடைபெற்ற 4 சுற்றுகளிலும் கல்லூரி மற்றும் பாடப்பிரிவில் இடம் ஒதுக்கப்படாத மாணவர்களுக்கும் ஓர் இறுதி வாய்ப்பாக நாளை (செவ்வாய் கிழமை) காலை 10 மணி முதல் பகல் 12 மணிவரை தரமணியில் உள்ள மைய தொழில்நுட்பக் கல்லூரியில் உள்ள கலையரங்கில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற உள்ளது. அதன் பின், மாலை 4 மணியள வில் கலந்தாய்வு நடக்க உள்ளது. மாணவர்கள், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவத்தின் நகல், 10, 11, 12-ம் வகுப்புகளில் மதிப்பெண் பட்டியல், சாதிச் சான்று, தேவைப்ப டும் பட்சத்தில் இருப்பிட சான்று, மாற்று சான்றிதழ் கொண்டு வர வேண்டும்.

அதற்கு முன் தங்கள் வரு கையைமாணவர்கள் 044-22351014, 044-22351015 ஆகிய தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரி விக்கலாம் அல்லது tnea2019enquiry @gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தலாம்.

No comments:

Post a Comment

Join Our Telegram Group