இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை வேண்டுமா? டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் - KALVISEITHI | கல்விச்செய்தி

Wednesday, 10 July 2019

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை வேண்டுமா? டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

Join Our KalviSeithi Telegram Group - Click Here Well Come to New kalviseithi Website
Join Our KalviSeithi Telegram Group - Click Here

ஐ.ஓ.சி.எல் என அழைக்கப்படும் இந்தியன் ஆயில் கழக நிறுவனத்தின் ஹால்தியாவில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்தில் நிரப்பப்பட உள்ள இளநிலை பொறியாளர், உதவியாளர், இளநிலை டெக்னிக்கல் உதவியாளர், பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: Junior Engineering Assistant-IV (Production) - 74 
பணி: Junior Engineering Assistant-IV (Electrical)/ Junior Technical Assistant-IV - 03
பணி: Junior Engineering Assistant-IV (Mechanical)/ Junior Technical Assistant-IV - 17
பணி: Junior Engineering Assistant-IV (Instrumentation)/ Junior Technical Assistant-IV - 03 
பணி: Junior Quality Control Analyst-IV - 03 
பணி: Junior Engineering Assistant-IV (Fire & Safety) - 04

வயதுவரம்பு: 30.06.2019 தேதியின்படி 18 - 24 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.

தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பொறியியல் துறையில் கெமிக்கல், ரீபைனரி அண்ட் பெட்ரோகெமிக்கல், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ருமென்டேசன் போன்ற பிரிவுகளில் டிப்ளமோ முடித்தவர்கள். இயற்பியல், வேதியியல், இண்டஸ்ட்ரியல் கெமிஸ்ட்ரி, கணிதவியல் துறையில் பி.எஸ்சி இளங்கலை பட்டம் பெற்றவர்களும், பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் பயர்சேப்டி படித்து, கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருப்பவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை: www.iocl.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.iocl.com/download/Ad_for_Stage-II_Recruitment_FINAL_Haldia_revised.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 04.08.2019 (உத்தேசம்)

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.07.2019

No comments:

Post a Comment

Join Our Telegram Group