அன்பிற்கினிய கணித ஆசிரியர்களுக்கு வணக்கம். நடந்து முடிந்த காலாண்டுத்தேர்வில் மாணவர்கள் பெற்ற கணித மதிப்பெண்களைப் பார்த்த நமக்கு அதிர்ச்சியாக உள்ளது. நாம் மற்ற பாட ஆசிரியர்களை விட அதிக நேரங்கள்(காலை / மாலை / விடுமுறை சிறப்பு வகுப்புகள்) வகுப்புகள் எடுத்தும் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைவாக உள்ளது. நாம் கடினமாக உழைத்தும் பலனின்றி உள்ளது. இதற்கு காரணம் கணிதத்தில் அதிக பாடச்சுமை, ஒவ்வொரு கணக்கும் ஒவ்வொரு model என அனைத்தையும் நாமே நடத்த வேண்டிய சூழல். Heavy Syllabus. மேலும் கிராமப்புற மாணவர்களுக்கு 10 ஆம் வகுப்பு கணித பாடத்திட்டம் பெரும் சுமையாக உள்ளது. கடந்த வருடம் வரை முப்பருவமாக தேர்வு எழுதி வந்தவர்கள் இந்த வருடம் 10ஆம் வகுப்பு புதிய பாடத்திட்டத்தின் சுமையை தாங்க முடியவில்லை. மேலும் இந்த வருடம் செய்முறை வடிவியல், GRAPH க்கு தலா 8 மதிப்பெண்களாக குறைக்கப்பட்டுவிட்டது. வரைபடத்தில் சிறப்பு வரைபடம் எடுக்கப்பட்டுவிட்டது. தற்போதைய பாடத்திட்டத்தில் உள்ள வரைபடங்கள் மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மிகவும் கடினமாக உள்ளது.+1, +2 வகுப்புகளுக்கு internal mark 10 தரப்படுவதுபோல 10ஆம் வகுப்பிற்கும் 10 மதிப்பெண்கள் internal மதிப்பெண்களாக வழங்கப்பட வேண்டும். பழையபடி geometery, graph க்கு தலா 10 மதிப்பெண்கள் வழங்கிட வேண்டும். பாடத்திட்டங்களை குறைத்திட வேண்டும் என கணித ஆசிரியர்கள் சார்பாக தேர்வுத்துறைக்கு கோரிக்கை வைக்க வேண்டும் என்பது எனது கருத்து . பல கணித ஆசிரியர்களின் கருத்துகளும் இதுவே. ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் கணித ஆசிரியர்கள் சார்பாக தேர்வுத் துறைக்கு கோரிக்கைகள் அனுப்பி கிராமப்புற மாணவர்களுக்கு உதவிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். அன்புடன் மூ.செந்தில்நாதன், அ.உ. பள்ளி, ஆச்சனூர், தஞ்சாவூர் மாவட்டம்
Join Our KalviSeithi Telegram Group - Click Here
No comments:
Post a Comment