இந்திய ஆண்களின் அடையாளமான வேட்டியின் கதை...! - KALVISEITHI | கல்விச்செய்தி

Monday, 14 October 2019

இந்திய ஆண்களின் அடையாளமான வேட்டியின் கதை...!

Join Our KalviSeithi Telegram Group - Click Here Well Come to New kalviseithi Website
Join Our KalviSeithi Telegram Group - Click Here

இந்தியாவில் ஆண்களின் பாரம்பரிய உடையாக வேட்டி உள்ளது. லுங்கியுடன் இதை தவறாக இணைத்து புரிந்துகொள்ளப்பட்டாலும் இது வேறுவிதமான ஆடை. வேட்டி கட்டும் விதத்திலும், அணுகுமுறையிலும் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபாடு உள்ளது. இது பல்வேறு நிகழ்ச்சிகளிலும், சடங்கு சம்பிரதாயங்களிலும் அணியப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் இதற்கு ஒவ்வொரு பெயருண்டு, கேரளாவில் முண்டு, மகராஷ்டிராவில் தோட்டார், பஞ்சாபில் லச்சா, உ.பி, பீகாரில் மர்தாணி என்றும் அழைக்கின்றனர். தோற்றம் மற்றும் வரலாறு: தவுத்தா என்ற சமஸ்கிருத பெயரிலிருந்து இது உருவாகியுள்ளது. இந்திய துணை கண்டத்தின் பல்வேறு அரசியல்வாதிகளும் இந்த பாரம்பரிய உடையை தங்கள் அடையாளமாக்கிக் கொண்டுள்ளனர். இலங்கை, வங்காளதேசம், மாலத்தீவுகள் போன்ற நாடுகளில் இன்றளவும் வேட்டியே பாரம்பரிய ஆடையாக உள்ளது. ஆரம்ப காலங்களில் குர்தாவுடன் மட்டுமே இதை அணிந்தனர். மரியாதை மற்றும் கண்ணியத்தை வெளிப்படுத்துவதாக வேட்டி மதிக்கப்படுகிறது. ஸ்டைல்: அடிப்படையில் அரை வெள்ளை அல்லது கிரீம் நிறங்களில் மட்டுமே வேட்டி கிடைக்கும். பருத்தி அல்லது பட்டுத்துணிகளில் இது கிடைக்கிறது. தென்னிந்திய பகுதிகளில் அகலமான கரை வைத்து இதனை தயாரிக்கின்றனர். இதன் மூலம் பகட்டான தோற்றத்தை இது வழங்குகிறது. ஒவ்வொரு மண்ணிலும் இதனை அணியும் பாணி வேறுபடுகிறது. தென்னிந்தியாவில் 5 மடிப்பாக வேட்டி கட்டப்படுகிறது. தென்னிந்தியாவில் உள்ளது போல இல்லாமல் இந்தியாவின் இதர பகுதிகளில் இது பேண்ட் போன்ற பாணியில் அணியப்படுகிறது. அதற்கு ஏற்றார் போல இதன் மத்தியில் தையல் போடப்படுகிறது. செல்வாக்கு: சில ஆண்டுகளாக இந்திய மக்கள் மேற்கத்திய கலாச்சாரம் மற்றும் ஆடைகளின் மீது மோகம் கொண்டவர்களாக மாறியுள்ளனர். மேற்கத்திய கலாச்சாரம் இந்தியர்களால் உள்வாங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வீடுகளில் மட்டுமே அணியக்கூடியதாக வேட்டி மாறியுள்ளது. அலுவலகங்களுக்கோ, நிகழ்ச்சிகளுக்கோ மக்கள் இதை அணிந்து செல்வதில்லை. எனவே இது பாரம்பரிய ஆடையாகவே அண்ணியப்பட்டுள்ளது. அதே நேரத்தில் காலப்போக்கில் வேட்டியின் ஸ்டைலும் மாறிவருவதை மறுப்பதற்கில்லை. வேட்டியை முட்டி அளவிற்கு மடித்துக்கட்டுவது மரியாதை குறைச்சல் என்ற மனநிலையும் மக்களிடையே உள்ளது என்பதால் அதனை முழுமையான நீளத்திற்கே கால் மறையும் அளவிற்கு கட்டப்படுகிறது. மேலும் உலகளாவிய ஆடைகளின் தாக்கத்தினால் தற்போது வேட்டியில் புதிய வண்ணங்களும் புகுத்தப்பட்டுள்ளது. விழாக்களும் வேட்டியும்.. பொதுவாகவே இவை திருமண விழாக்களில் அணியப்படும் ஆடையாக உள்ளது. தென்னிந்திய திருமணங்களில் இவை ஆண்களின் முக்கியமான ஆடையாக விளங்குகிறது. பெரும்பாலான அரசியல்வாதிகள் இதனை சாதாரண உடையாக ஆக்கிக்கொண்டுள்ளனர். அதே போல கோவில்களின் அர்ச்சகர்களும் வேட்டிகளை வழக்கமான ஆடையாக அணிந்து வருகின்றனர். இதன் தளர்வுத் தன்மையால் கிடைக்கும் சொகுசினை கருத்தில் கொண்டு கிராமப்புறங்களிலும், நகர்ப்புறங்களிலும் ஆண்கள் வீடுகளில் வேட்டி அணிவதை விரும்புகின்றனர். பருத்தி மற்றும் பட்டு என இரண்டிலும் கிடைப்பதால் இந்த ஆடை அனைத்து காலங்களுக்கும் ஏற்றதாக உள்ளது. பட்டு வகைகள் திருமணம் உள்ளிட்ட சடங்கு சம்பிரதாயங்களின் போதும், பருத்தி அன்றாடம் அணியக்கூடியதாகவும் உள்ளது. உலகளாவிய தாக்கம்: உலகளாவிய கலாச்சாரத்தில் வேட்டி தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. உலகின் மூளை முடுக்குகளில் வசிப்பவர்களும் பாரம்பரிய ஆடையான வேட்டியை பேண்ட் போன்று அணிந்து இன்றைய நவநாகரிக ஆடையாக அதனை மாற்றியுள்ளனர். துணைப் பொருட்கள்: வீட்டில் இருக்கும் போது குர்தா அல்லது சட்டையுடன் ஆண்கள் வேட்டி அணிகின்றனர். இதுவே விஷேச நிகழ்ச்சிகளின் போது அங்கவஸ்திரம் என்ற மேலாடையுன் சேர்த்துக் கொள்கின்றனர். இதுவே விவசாயிகள் வெறும் துண்டு ஒன்றை மட்டுமே அணிகின்றனர். ஆண்களின் வேட்டிக்கு பொருந்தும் வகையில் பெண்கள் நகைகள் அணியும் போது அலங்காரமாக அமைந்துவிடுகிறது. சுவாரஸ்யமான உண்மைகள் மற்றும் ஒப்பீடுகள்: வடஇந்தியாவில் வண்ணமயமாகிவிட்ட வேட்டி, தற்போதும் தென்னிந்தியாவில் அதன் பாரம்பரிய வென்நிறத்தை விட்டுக்கொடுக்காமல் நீடித்து வருகிறது. கண்டுபிடிப்புகளின் பலனாக இவை இன்று வேட்டி - பேண்ட் என்ற புதிய பரிணாமத்திற்கு சென்றுள்ளன.

No comments:

Post a Comment

Join Our Telegram Group