குட்டீஸ் கோபத்தை குறைப்பது எப்படி? - KALVISEITHI | கல்விச்செய்தி

Monday, 14 October 2019

குட்டீஸ் கோபத்தை குறைப்பது எப்படி?

Join Our KalviSeithi Telegram Group - Click Here Well Come to New kalviseithi Website
Join Our KalviSeithi Telegram Group - Click Here


குட்டீஸ்... சமர்த்துப் பிள்ளையான உங்களை, நீங்கள் ரொம்ப கோபப்படுவதாக மற்றவர்கள் கூறுவதுண்டா? அப்ப கோபத்தைக் குறைக்க என்ன செய்யலாம்? என்பதை பார்ப்போம்...
குட்டீஸ் கோபத்தை குறைப்பது எப்படி?
உங்களுக்கு கோபம் வருமா? குட்டீஸ். அம்மா, நீங்கள் கேட்ட பொம்மையை, சாக்லெட்டை வாங்கித் தராவிட்டால் கோபம் வந்துவிடுகிறதா? அம்மா கூப்பிட்டாலும் சத்தம் கொடுக்காமல் முகத்தை திருப்பிக் கொள்கிறீர்களா? கோபம் கொடியது என்பதை நீங்கள் அறிவீர்களா? கோபம் ஏன் வருகிறது? கோபத்தால் விளையும் தீமைகள் என்ன? கோபத்தை கட்டுப்படுத்துவது எப்படி? என்பது பற்றி உங்களுக்குத் தெரியுமா? அது பற்றி அறிந்து கொள்ளலாம்...

* உணர்ச்சி கொந்தளிப்பின் வெளிப்பாடாக கோபம் வருகிறது. வெறுப்பு, வலி, பயம் ஆகியவையே கோபத்தின் வேர்களாக உள்ளன. ஆரம்பத்தில் எதிர்பார்ப்பின் காரணமாக வெறுப்பும், வலியும் ஏற்படலாம். நம்பிக்கையின்மை, அறியாமை, சந்தேகம் உள்ளிட்ட காரணங்களால் ஏற்படும் பயமும், கோபம் உருவாக காரணமாகலாம். நீங்களாக யோசித்துப் பார்த்தால் கோபத்தின் அடியில் இந்த உணர்ச்சிகளின் வெளிப்பாடு இருப்பதை உணரலாம். எதிர்பார்ப்பை குறைப்பதன் மூலம் வெறுப்பை தணிக்கலாம். வெறுப்பை கைவிட்டால் கோபமும், துன்பமும் பறந்துபோகும்.

குட்டீஸ்... சமர்த்துப் பிள்ளையான உங்களை, நீங்கள் ரொம்ப கோபப்படுவதாக மற்றவர்கள் கூறுவதுண்டா? கோபத்தால் உண்டாகும் தீமைகளை இங்கே தெரிந்துகொண்ட பிறகும் கோபப்படுவது தவறு என்பதை புரிந்து கொண்டீர்களா? கோபத்தைக் குறைக்க என்ன செய்யலாம்? என்பதை பார்ப்போம்...

* பேசுவதில் கவனம் வையுங்கள். இனிமையாக பேசுங் கள். உங்கள் வார்த்தைகள் மற்றவர் மனதை காயப் படுத்தாத வகையில் இருந்தால் அவர்களும் உங்க ளை கோபப்படும் அளவுக்கு காயப்படுத் தமாட்டார்கள்.

* விளையாட நேரம் ஒதுக்குங்கள். அது மனதை பக்குவப்படுத்தும். சவாலான நேரங்களையும் எதிர்கொள்ளும் பக்குவத்தை எட்டும்.

* சிறிது நேரம் வெளியே சென்று வாருங்கள். பொழுது போக்கு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளுங்கள்.

* நான் சரியாகத்தான் நடந்து கொண்டேன், எல்லாம் எனக்குத் தெரியும் என்பது போன்ற கர்வ நடத்தைகளை தவிருங்கள்.

* வேலையில் மூழ்கி மனவருத்தங்களில் இருந்து விடுதலை பெறுங்கள்.

* மூச்சுப் பயிற்சியும் மனநிலை மாற்றத்திற்கு துணை செய்யும்.  

No comments:

Post a Comment

Join Our Telegram Group