இளமையை தக்கவைத்துக் கொள்ள அற்புத குறிப்புகள்...! - KALVISEITHI | கல்விச்செய்தி

Monday, 14 October 2019

இளமையை தக்கவைத்துக் கொள்ள அற்புத குறிப்புகள்...!

Join Our KalviSeithi Telegram Group - Click Here Well Come to New kalviseithi Website
Join Our KalviSeithi Telegram Group - Click Here


இளமையை தக்கவைத்துக் கொள்ள அற்புத குறிப்புகள்...! 

கீரை, புரோக்கோலி, தக்காளி, தர்பூசணி, திராட்சை, கொய்யா, கொண்டைக்கடலை, ஓட்ஸ், சிவப்பரிசி இவையெல்லாம் சருமம் காக்கும் உணவுப் பொருள்கள். ரிபோஃப்ளேவின், நியாசின், சயானோகோபாலமின் போன்ற வைட்டமின்கள் நிறைந்த சில உணவுகளை அன்றாட உணவுப் பட்டியலில் சேர்த்துக்கொள்ளுங்கள். திரவ உணவுகளை அதிகம் உட்கொண்டால், உடலிலுள்ள நச்சுகள் வெளியேறிவிடும். 


 பாதாம் பருப்பிலும் வால்நட்டிலும் வைட்டமின் ஈ நிறைந்துள்ளது; இது, சருமத்தைப் பாதுகாக்கும். கிரீன் டீ, தயிர், தேன் ஆகியவையும் சருமத்துக்கு நல்லவை. சர்க்கரையும் கார்போஹைட்ரேட்டும் நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிடுவது சருமத்திலிருக்கும் கொலாஜனை பாதித்து, சுருக்கத்தை ஏற்படுத்திவிடும். இவற்றுக்கு பதிலாகப் பழங்களையும் காய்கறிகளையும் சேர்த்துக்கொள்வது சருமத்துக்கு நல்லது. முதுமையைத் தள்ளிப்போட நினைப்பவர்கள் முக்கியமாகத் தவிர்க்கவேண்டியது ஆல்கஹால். இது உருவாக்கும் ஃப்ரீ ராடிக்கல்ஸ் சருமத்திலிருக்கும் செல்களை பாதித்து, விரைவில் முதுமைத் தோற்றத்தை ஏற்படுத்திவிடும்.

No comments:

Post a Comment

Join Our Telegram Group