இளைஞர்களை ஈர்க்கும் நார்த் இந்தியன் உணவுகள்... ஆரோக்கியமானவையா? நிபுணரின் அலர்ட் - KALVISEITHI | கல்விச்செய்தி

Monday, 14 October 2019

இளைஞர்களை ஈர்க்கும் நார்த் இந்தியன் உணவுகள்... ஆரோக்கியமானவையா? நிபுணரின் அலர்ட்

Join Our KalviSeithi Telegram Group - Click Here Well Come to New kalviseithi Website
Join Our KalviSeithi Telegram Group - Click Here


இளைஞர்களை ஈர்க்கும் நார்த் இந்தியன் உணவுகள்... ஆரோக்கியமானவையா? நிபுணரின் அலர்ட்



விதவிதமான சிற்றுண்டி வகைகளைத் தேடித்தேடி உண்ணும் இந்த நவீன யுகத்தில், ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே இருப்பதில்லை. பாரம்பர்ய உணவு வகைகளோடு வட இந்திய மற்றும் மேற்கத்திய உணவுகள் மீதும் அதீத ஆசை தற்போது பெரும்பாலானவர்களுக்கு உள்ளது. 

அவற்றுள் எது ஆரோக்கிய உணவு, உடலுக்குத் தீங்கு விளைவிக்காத உணவு வகைகள் எவை போன்றவற்றை விரிவாக விளக்குகிறார் டயட்டீஷியன் மீனாக்ஷி பஜாஜ்.Channa masala "உளுந்து வடை, பொரி உருண்டை, எள்ளுருண்டை, சுண்டல் போன்றவற்றைதான் தற்போது நாம் பேல் பூரி, பானி பூரிக்களாக மாற்றிவிட்டோம். வட இந்திய உணவுகளிலும் ஏராளமான ஆரோக்கிய உணவு வகைகள் உள்ளன. 

தந்தூரி ரொட்டி, பருப்பு, ராஜ்மா போன்றவை அவற்றுள் சில. இவற்றை மாடர்ன் ஸ்நாக்கிங் பழக்கவழக்கம் எனலாம். இதில் முக்கியமாக நாம் பார்க்க வேண்டியது உணவுப் பாதுகாப்புதான். பானி பூரிக்கு உபயோகிக்கும் தண்ணீர் கொதிக்க வைக்கப்படாதது. 

எனவே, அவர்கள் எந்தத் தண்ணீரை உபயோகித்திருக்கிறார்கள், எந்தளவுக்குப் பாதுகாப்பானது என்பது நமக்குத் தெரியாது. அதேபோல அவர்கள் உபயோகிக்கும் பூரி, புதிய எண்ணெயில் பொரிக்கப்பட்டதுதானா என்பதும் மிகப்பெரிய கேள்விக்குறியே. அதிலிருக்கும் ஒரேயொரு பாசிட்டிவ் பகுதி, அதில் திணிக்கப்படும் பயறு வகைகள்தான். பேல் பூரியில் உபயோகிக்கும் பொருள்கள் எந்த அளவுக்குச் சுகாதாரமானவை என்பதையும் நம்மால் கணிக்க முடியாது. அதில் சேர்க்கப்படும் சட்னி சமைக்கப்படாதது, பச்சையானது என்பதால், அதில் அதிகம் கவனம் தேவை. என்னதான் சுவைக்கு அடிமையானாலும், சுண்டலுக்கு எதுவும் ஈடாகாது. பாவ் பாஜியைப் பொறுத்தவரை, பாஜியில் ஏராளமான வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் உள்ளன. 

மேலும், இது அடர்த்தியான ஊட்டச்சத்துகள் மிகுந்த உணவு. இதில் வெண்ணெய் சேர்க்கும்போது, அதிகப்படியான saturated fatty acid உடலில் சேர வாய்ப்புள்ளது. Healthy snacking பாஜியோடு பயன்படுத்தும் பாவ் அல்லது பன்னை, டோஸ்ட் செய்யாமல் சாப்பிடுவது சிறந்தது. 

பட்டர் நாண், பட்டுரா, பாவ் போன்றவை refined மாவினால் தயாரிக்கப்படுவதால், நிச்சயம் இவை பாதுகாப்பற்ற உணவுகள்தான்." எம்,எஸ்.ஜி எனப்படும் 'Mono sodium glutamate' போன்ற சுவையை அதிகரிக்கச் செய்யும் பொருள்களைப் பயன்படுத்துவது பாதுகாப்பானதா? The Food and Drug Administration (FDA)-ன் தரவுப்படி Mono sodium glutamate பாதுகாப்பான உணவுப் பொருள் என்று கருதப்படுகிறது. ஆனால், அதைச் சுற்றியுள்ள சர்ச்சை தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. 

அதற்கென்று பரிந்துரைக்கப்பட்ட அளவுக்கு மேல் உபயோகித்தால் நிச்சயம் பிரச்னைதான். பொதுவாக, இவை சீன உணவுகள், canned vegetables, சூப் மற்றும் பதப்படுத்தப்பட்ட மாமிசங்களில் சேர்க்கப்படுகிறது. ரத்த அழுத்தப் பிரச்னையால் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு, உணவில் சேர்க்கப்படும் சாதாரண உப்போடு, Mono sodium glutamate சேர்த்தால், கண்டிப்பாக ரத்த அழுத்தம் அதிகரிக்கும். உப்புக்குப் பதிலாக Mono sodium glutamate சேர்ப்பது, பாதுகாப்பானது. இந்தச் சம அளவு மாற்றம், சோடியம் உட்கொள்ளலை 37 சதவிகிதம்வரை குறைக்கிறது. ஆனால், இரண்டையும் ஒன்றாக ஒருபோதும் சேர்க்கவே கூடாது. மேலும், சோயா சாஸ், தக்காளி சாஸ் போன்றவற்றையும் உணவில் சேர்க்கும் நிலை ஏற்படும்போது, உடலிலுள்ள சோடியம் அளவு அதிகரிக்கும். இதனால், சிறுநீரகச் செயலிழப்பு, இதயப் பிரச்னைகள் உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்படும். பாதுகாப்பான ஸ்நாக்ஸ் வகைகள் எவை? சன்னா, ராஜ்மா, ஜோவார், பாஜ்ரா, புல்கா, ராகி, மிஸ்ஸி ரொட்டி, மக்காய் கி ரொட்டி, Sarson ka saag, வீட்டில் தயாரிக்கப்படும் பனீர் போன்றவற்றைச் சாப்பிடலாம். அதேபோல, பால், தயிர், பனீர் என்று அனைத்தையும் ஒரே நேரத்தில் உட்கொள்ளக் கூடாது. சிறிய பகுதிகளாக எடுத்துக்கொள்ளலாம். ஆனால், குழந்தைகளுக்கு இந்தப் பால் மற்றும் பனீர் வகைகளைத் தாராளமாகக் கொடுக்கலாம். பனீரை வேகவைத்து, சிறிய துண்டுகளாக்கிச் சாப்பிடலாம். சப்பாத்தியினுள் வேகவைத்த காய்கறிகளை நிரப்பி, ஃபிராங்கி (Frankie) போல உண்ணலாம்.

 நார் மற்றும் புரதச்சத்து அதிகமுள்ள சன்னா, ராஜ்மா போன்றவற்றைச் சிறியவர்கள் முதல் முதியவர்கள்வரை அனைவரும் எடுத்துக்கொள்ளலாம். அதில், தீங்கு விளைவிக்காத நல்ல கொழுப்புச்சத்தும் உள்ளது. ஆலையில் அரைத்து பாலிஷ் செய்யப்பட்ட அரிசியைவிட நீண்ட பாசுமதி அரிசி, சிவப்பு அரிசி, கறுப்பு அரிசி போன்றவை உடலுக்கு ஆரோக்கியமானவை. ஆனால், அதையும் அளவோடுதான் உட்கொள்ள வேண்டும். 

அளவுக்கு மீறினால் எதுவும் கெடுதல்தான், பதப்படுத்தப்பட்ட உணவுகளில் அதிகப்படியான உப்பு, சர்க்கரை, கொழுப்பு மூன்றுமே குவிந்திருக்கும். இவற்றில் நார்ச்சத்து நிச்சயம் இருக்காது. கலோரிகளும் இதில் அதிகளவில் இருக்கும். ஃப்ரெஷ் உணவுகள்தான் என்றைக்குமே பாதுகாப்பானவை!


No comments:

Post a Comment

Join Our Telegram Group