மகாத்மா காந்தி 150 ஆவது பிறந்த தின விழாவை முன்னிட்டு திருச்சி எடமலைப்பட்டி புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அண்ணல் காந்தியடிகள் மாறுவேடப்போட்டி நடைபெற்றது. பள்ளி மாணவ மாணவிகள் மகாத்மா காந்தி வேடம் அணிந்து மகாத்மா காந்தி சிந்தனைகள் குறித்து எடுத்துரைத்தார்கள் காந்தி வேடமிட்டு காந்திய சிந்தனைகளை சிறந்த முறையில் எடுத்துரைத்த மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயந்தி வரவேற்றார். முன்னாள் கிராம கல்விக்குழு தலைவர் முத்துச்செல்வம், பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் மணிவண்ணன், அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிறுவனரும் யோகாசன ஆசிரியருமான விஜயகுமார் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றார்கள். நிறைவாக பள்ளி உதவி ஆசிரியர் புஷ்பலதா நன்றி கூறினார்
Join Our KalviSeithi Telegram Group - Click Here

No comments:
Post a Comment