10ஆம் வகுப்பு - மாணாக்கரின் பெயர் பட்டியலை பதிவிறக்கம் செய்து திருத்தங்கள் மேற்கொள்வதற்கும் 04 . 01 . 2020 தேதி வரை கால நீட்டிப்பு - KALVISEITHI | கல்விச்செய்தி

Tuesday, 31 December 2019

10ஆம் வகுப்பு - மாணாக்கரின் பெயர் பட்டியலை பதிவிறக்கம் செய்து திருத்தங்கள் மேற்கொள்வதற்கும் 04 . 01 . 2020 தேதி வரை கால நீட்டிப்பு

Join Our KalviSeithi Telegram Group - Click Here Well Come to New kalviseithi Website
Join Our KalviSeithi Telegram Group - Click Here

மார்ச் 2020 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான பள்ளி மாணக்கரின் பெயர் பட்டியல் தயாரிக்கும் பொருட்டு , அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களும் தங்கள் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணாக்கரின் விவரங்களை 16 . 12 . 2019 முதல் 30 . 12 . 2019 வரையிலான நாட்களில் இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்து , தேர்வு கட்டணம் மற்றும் TML கட்டணத்தினையும் இணையதளம் வாயிலாக செலுத்தவேண்டும் என அறிவுறுத்தப்பட்டது .

இந்நிலையில் ஒரு சில பள்ளிகளின் மாணாக்கரின் விவரங்களை இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்வதிலும் , இணையதளம் மூலம் தேர்வு கட்டணத்தினை செலுத்துவதிலும் சில சிமரங்கள் ஏற்படுக்கின்றன என தெரிய வருதால் , பத்தாம் வகுப்பு மாணாக்கரின் விவரங்களை இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்வதற்கும் தேர்வுக் கட்டணம் செலுத்துவதற்கும் மற்றும் மாணாக்கரின் பெயர் பட்டியலை பதிவிறக்கம் செய்து திருத்தங்கள் மேற்கொள்வதற்கும் 04 . 01 . 2020 தேதி வரை கால நீட்டிப்பு செய்து வழங்கப்படுகிறது .

மேற்படி நாட்களுக்குள் மேற்காண் பணியினை விரைந்து முடிக்குமாறு சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்துமாறு தெரிவிக்கப்படுகிறது .

No comments:

Post a Comment

Join Our Telegram Group