அரசு தேர்வுகள் இயக்குநர் உஷாராணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை, பழைய பாடத்திட்டத்தில் எழுதி தேர்ச்சி பெறாதவர்கள், 2020 மார்ச் மற்றும் ஜூன் பருவங்களில் நடக்கும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வை, பழைய பாடத் திட்டத்திலேயே எழுதலாம்.நேரடி தனித் தேர்தவர்கள் அனைவரும், பகுதி ஒன்று மொழிப் பாடத்தில், தமிழ் தேர்வு எழுத வேண்டும். மத்திய, மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில், எட்டாம் வகுப்பு தேர்வில், ஆங்கிலத்துடன் தேர்ச்சி பெற்ற, மாணவ -மாணவியர் விண்ணப்பிக்கலாம்.
ஒன்பதாம் வகுப்பு வரை படித்து, இடையில் நின்ற மாணவர்களும் தேர்வு எழுதலாம்.அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்பில் சேர,2019 ஜூன், 6 முதல், 29 வரை, அவகாசம் வழங்கப்பட்டது.அப்போது, விண்ணப்பிக்க தவறிய தனித் தேர்வர்கள், ஜன., 6 முதல், 13 வரை, சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலரை அணுகி, பதிவுக் கட்டணம், 125 ரூபாய் செலுத்தி, தங்கள் பெயரை பதிவு செய்ய வேண்டும்.தனித் தேர்வர்கள், தங்கள் விண்ணப்பங்களை, 'ஆன்லைனில்' பதிவு செய்ய, கல்வி மாவட்ட வாரியாக, சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. விபரங்களை, www.dge.tn.gov.in என்ற, இணையதளத்தில் அறியலாம்.
இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment