இந்த வருடத்தின் கடைசி சூரிய கிரகணம் நாளை மறுநாள் டிசம்பர் 26ம் தேதி காலை 8 மணி முதல் 11 மணி வரை நிகழ உள்ளது. டிசம்பர் 26ம் தேதி நிகழ இருக்கின்ற இந்த சூரிய கிரகணம் தமிழகத்தில் ஊட்டி, கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல், சிவகங்கை, திருச்சி, புதுக்கோட்டை ஆகிய ஊர்களில் தெளிவாக தெரியும்.
சூரியனுக்கும் பூமிக்கும் இடையே ஒரே நேர் கோட்டில் நிலவு வரும் போது, நிலவின் நிழல் பூமியின் மீது விழும். இந்த நிகழ்வை சூரிய கிரகணம் என்று அழைக்கிறோம். இந்த வருடத்தின் கடைசி சூரிய கிரகணம் நாளை மறுநாள் 26ஆம் தேதி காலை 8 மணி முதல் காலை 11.11 வரை 3 மணி நேரம் நிகழ உள்ளது. சரியாக சூரிய கிரகணத்தை காலை 9.35 மணிக்கு 2 நிமிடங்கள் நம்மால் பார்க்க முடியும்.
இந்தியா முழுவதும் இந்த சூரிய கிரகண நிகழ்வு தெரிய வரும். குறிப்பாக தமிழகத்தில் ஊட்டி, கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல், சிவகங்கை, திருச்சி, புதுக்கோட்டை ஆகிய ஊர்களில் தெளிவாக தெரியும்.
பல வருடங்களுக்கு பின்னர் வரும் இந்த அதிசய சூரிய கிரகணத்தை மூட நம்பிக்கையை தவிர்த்து அதற்கென உரிய சூரிய கண்ணாடி போன்றவற்றை அணிந்து பார்க்கலாம்.
இந்த சூரிய கிரகணம் ஆனது, நிலவு சூரியனை தொடுவது, சூரியனின் விளிம்பு மட்டும் தெரிவது, சூரியனில் இருந்து விலக தொடங்குவது, முழுமையாக சூரியனில் இருந்து விலகுவது என்று மொத்தம் ஐந்து படிநிலைகளைக் கொண்டது. இந்த அதிசய சூரிய கிரகணத்தை தகுந்த உபகரணங்களோடு உங்கள் குழந்தைகளுக்கும் காட்டி விளக்குங்கள்!
No comments:
Post a Comment