ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் எச்ஐஎல் நிறுவனத்தில் வேலை! - KALVISEITHI | கல்விச்செய்தி

Sunday, 22 December 2019

ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் எச்ஐஎல் நிறுவனத்தில் வேலை!

Join Our KalviSeithi Telegram Group - Click Here Well Come to New kalviseithi Website
Join Our KalviSeithi Telegram Group - Click Here

ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் எச்ஐஎல் நிறுவனத்தில் வேலை!

மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான பூச்சிக்கொல்லி மருந்து தொழிற்சாலையில் காலியாக பல்வேறு பொறியாளர், அதிகாரி உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு ரூ.40 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : பூச்சிக்கொல்லி மருந்து தொழிற்சாலை (HIL)

மொத்த காலிப் பணியிடங்கள் : 06

பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள்:

பொறியாளர் (Electrical, IT)

காலிப் பணியிடங்கள் : 02

கல்வித் தகுதி : பொறியியல் துறையில் ஐடி அல்லது எலக்ட்ரிக்கல் பிரிவில் பி.இ., முடித்து குறைந்தது 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம் : மாதம் ரூ.16,400 முதல் ரூ.40,500 வரையில்

Officer (Commercial)

காலிப் பணியிடங்கள் : 02

ஊதியம் : மாதம் ரூ.18.400 முதல் ரூ.40,500 வரையில்

கல்வித் தகுதி : பொறியியல் துறையில் ஏதேனும் ஓர் பிரிவில் பட்டம் பெற்று மெட்டீரியல் பிரிவில் 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Officer (Accounts)

காலிப் பணியிடங்கள் : 02

கல்வித் தகுதி : CA, ICWA, MBA (Finance) உள்ளிட்ட ஏதேனும் ஓர் துறையில் பயின்று குறைந்தது ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம் : மாதம் ரூ.16,400 முதல் ரூ. 40,500 வரையில்

வயது வரம்பு : மேற்கண்ட பணியிடங்களுக்கு 32 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.hil.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தினைப் பெற்று, பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 26.12.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.hil.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதள முகவரியினைக் காணவும்.

No comments:

Post a Comment

Join Our Telegram Group