
நீங்கள் ஒரு சுற்றுலாப் பயணியாகவோ, பணிநிமித்தமாகவோ ஜெர்மனி, ஜப்பான், போன்ற நாடுகளுக்கு செல்லும்போது உங்களுக்கு உங்கள் தாய் மொழி அல்லது ஆங்கிலம் மட்டுமே தெரியும். அவர்களுக்கோ அந்த நாட்டு மொழியை தவிர வேறு எதுவும் தெரியாது. அவர்களுக்கு ஆங்கிலமும் ஓரளவுதான் தெரியும். இந்த பிரச்சனைகளை சமாளிக்க மொழிமாற்றம் செய்யக்கூடிய ஒரு அப்ளிகேஷன் அதாவது செயலியை 44 மொழிகளில் அறிமுகம் செய்துள்ளது கூகுள்
அதாவது இந்த ஆண்டுக்கான கன்ஸ்யூமர் எலெக்ட்ரானிக்ஸ் ஷோவின் போது ஸ்மார்ட் டிஸ்பிளேக்களில் மட்டும் இயங்கும் கூகுள் அசிஸ்டெண்ட் இண்டெர்ப்ரெட்டர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
நாம் பேச விரும்பும் மொழியில் பேசினால் அதை அப்படியே மொழி பெயர்ப்பு செய்து, மற்ற நாட்டினரிடம் தெரிவிக்கும். மறுமார்க்கத்தில் அவர்கள் பேசும் மொழியை புரிந்து கொண்டு நம்முடைய மொழியில் நமக்கு தெரிவிக்கும். இந்த வசதியை கூகுள் ஆண்ட்ராய்ட் போன்களிலும் உருவாக்கியுள்ளது. இது ஒரே நேரத்தில் இருவர் பேசும் மொழியையும் மொழி பெயர்க்கும். எனவே இனி கவலையே இல்லாமல் நீங்கள் வெளிநாடுசெல்லலாம்.
கூகுள் அசிஸ்டெண்ட் அனைத்து ஆண்ட்ராய்ட் போன்களிலும் ப்ரீ இன்ஸ்டால் செய்யப்பட்டு தான் வெளியாகிறது. ஆப்பிள் போன்களில் பயன்படுத்த முதலில் கூகுள் அசிஸ்டெண்ட்டை முதலில் டவுன்லோட் செய்ய வேண்டும்.
ஓகே கூகுள் கூறிய பின்பு கூகுள் ட்ரான்ஸ்லேசன் ப்ரோசஸ் துவங்கும். பின்னர் நீங்கள் "Be my Italian interpreter" அல்லது "Help me speak Spanish"அல்லது "Turn on interpreter mode" போன்ற கட்டளைகளை உங்கள் மொழித் தேவைக்கு ஏற்ற வகையில் கூறுங்கள்.
ஓகே கூகுள் கூறிய பின்பு கூகுள் ட்ரான்ஸ்லேசன் ப்ரோசஸ் துவங்கும். பின்னர் நீங்கள் "Be my Italian interpreter" அல்லது "Help me speak Spanish"அல்லது "Turn on interpreter mode" போன்ற கட்டளைகளை உங்கள் மொழித் தேவைக்கு ஏற்ற வகையில் கூறுங்கள்.
பின்பு இண்டெர்பிரெட்டர் ஆன் ஆகிய பிறகு ஏதேனும் ஒரு மொழியில் நீங்க பேச துவங்கினால் தானாக கூகுள் அதனை மொழி பெயர்த்து உச்சரிக்கும்..
No comments:
Post a Comment