"கோபம் இல்லாத, மகிழ்ச்சி நிறைந்த இடங்களாக பள்ளிகளை மாற்ற வேண்டும்" என தாம் நிர்வகிக்கும் அனைத்து பள்ளி களுக்கும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக, சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு அதன் செயலாளர் அனுராஹ் திரிபாதி அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ள தாவது:
மாணவர்களுக்கு கல்வியை மட்டுமின்றி ஒழுக்க நெறிகளை கற்றுகொடுக்கும் இடங்களாக பள்ளிகள் இருக்க வேண்டும். மாணவர்கள் தாங்கள்கற்கும் எதையும் பிறருக்கு கொண்டு சேர்க்கும் திறமை கொண்டவர்கள். எனவே, அவர் களுக்கு முன்னுதாரணமாக நாம் விளங்க வேண்டியது அவசியம்.அந்த வகையில், கோபத்தை கட்டுப்படுத்த பள்ளி நிர்வாகத்தின ரும், ஆசிரியர்களும் பழகிக் கொள்ள வேண்டும். அப்போது தான், மாணவர்களும் தங்களின் கோபத்தை தவிர்க்க பழகுவார்கள். கோபத்தினால் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் எதிர்மறையான சிந்தனைகள் உருவாகின்றன. அதனை தவிர்ப்பதன் மூலமாக, நேர்மறையான எண்ணங்கள் உருவாகி தங்களின் ஆக்கப்பூர்வ மான திறமைகளை மாணவர்கள் வளர்த்துக் கொள்ள முடியும்.ஆதலால், கோபத்தை தவிர்க் கும் வழிமுறைகளை சிபிஎஸ்இ பள்ளி நிர்வாகங்களும், அதன் ஆசிரியர்களும் கடைப்பிடிக்க வேண்டும். உடற்பயிற்சி, முறை யான மூச்சுப்பயிற்சி ஆகியவற்றின் மூலமாக கோபத்தை குறைக்கலாம்.
இதுபோன்ற பயிற்சிகளை மாணவர்களுடன் சேர்ந்து ஆசிரி யர்களும், பள்ளி நிர்வாகத்தினரும் மேற்கொள்ள வேண்டும். இதற் காக, நாளொன்றுக்கு ஒரு பாட வேளையை பள்ளி நிர்வாகம் கட்டா யம் ஒதுக்க வேண்டும். கோபம் இல்லாத, மகிழ்ச்சி நிறைந்த இடங்களாக பள்ளிகளை மாற்ற பள்ளி நிர்வாகங்கள் உறுதியேற்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment