மக்களவையில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்டத்தை தடை செய்ய மாணவ, மாணவிகள் நூதனமான முறையில் போராட்டத்தை வெளிப்படுத்தி வரும் நிலையில் ஜாதவ்பூர் பல்கலைக்கழக மாணவி ஒருவர் சிஏஏ நகலை கிழித்தெறிந்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கப்பட்ட புதிய குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன. குறிப்பாக தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம், டெல்லி, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இளைஞர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என ஒன்றுகூடி போராட்டங்களை நடத்திவந்தனர்.
கர்நாடகா மற்றும் வட மாநிலங்களில் போராட்ட களத்தில் மூண்ட வன்முறையால் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 20 க்கும் மேற்பட்டோர் பலியாகினர். ஆனால் இறந்த அனைவரும் துப்பாக்கி சூட்டில் இறக்கவில்லை என காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.
இந்தியாவில் தீவிரமடைந்த இந்த போராட்டம் தற்போது அமைதி அடைந்துள்ளது. இருப்பினும் மாணவ, மாணவிகள் சிஏஏ சட்டத்துக்கு எதிராக அவ்வப்போது எதிர்ப்புகளை அரசின் கவனத்திற்கு கொண்டு வருகின்றனர். முன்னதாக புதுச்சேரி பல்கலைகழக மாணவி ரபீஹா தனது தங்க பதக்கத்தை நிராகரித்து சிஏஏ-க்கு எதிரான கண்டனத்தை தெரிவித்தார்.
No comments:
Post a Comment